ஞாயிறு, 23 ஜூன், 2013

40 அடி மனிதனின் பாதச் சுவடு நெடுந்தீவில் கண்டு பிடிப்பு ! வரலாற்றுக்கு முந்தைய மர்மங்கள்

இது உண்மையிலேயே மிகவும் அதிசயமான ஒரு பாத சுவடுதான் . வழக்கம்போல இதையும் சமய கோட்பாடுகளுடன் சம்பத்தப்படுத்தும் கதைகள் கட்டி விடப்படுகின்றன , இது ஒரு வேளை அழிந்து போன குமரிகண்டம் அல்லது அட்லாண்டிஸ் போன்ற lost continent பற்றிய பெரிய உண்மையை வெளிப்படுத்துவதாக இருக்கலாம் .
யாழ்.நெடுந்தீவு பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்ததுடன் இது பாறைகள் சிதைவடைந்து கூட இந்த சுவடு உருவாகியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால் உருவானதாகவும், இராமாயணப் போர் நடைபெற்ற போது அனுமான் மலையைத் தூக்கிக் கொண்டு வரும் போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் தற்போது இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். Written By newscenter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக