வியாழன், 27 ஜூன், 2013

கனிமொழி வெற்றி மீண்டும் எம்.பி.,யானார்.! 31 ஓட்டுக்கள் பெற்றார்

தமிழகத்தில் இன்று நடந்த ராஜ்யசபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள்மாலை எண்ணப்பட்டன. இதில் மொத்தம் 230 ஓட்டுக்கள் விழுந்தன. ஒரு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டன.
மொத்தம் 6 சீட்களில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி,மு.க., சார்பில் மைத்ரேயன் ( 36 ஓட்டுக்கள்) , ரத்தினவேல் ( 36 ஓட்டுக்கள்)அர்ஜூனன் ( 36 ஓட்டுக்கள்)லட்சுமணன் ( 35 ஓட்டுக்கள்)இந்த கட்சியின் ஆதரவு பெற்ற இந்திய கம்யூ., கட்சியை சேர்ந்த டி. ராஜா ( 34 ஓட்டுக்கள்) பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடும் போட்டி நிலவிய கனிமொழி 31 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.ஓட்டு எண்ணி முடிக்கும்வரை கனிமொழியின் வெற்றி உறுதியாக சொல்ல முடியாத நிலையில் தான் இருந்தது.
அதே நேரத்தில் தி.மு.க,வுக்கு இந்த கட்சியின் எம்,எல்.ஏ.,க்கள் 23 பேர், இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேர்,புதிய தமிழகம் 2 பேர், மனிதநேய மக்கள் கட்சி 2 பேர் ஆக மொத்தம் 32 பேர் இவர்களுக்கு ஓட்டளித்தனர். இதில் ‌ஒரு ‌ஓட்டு செல்லாமல் போனது.

தே.மு.தி.க.,வை பொறுத்தவரை மொத்தம் 29 பேர்களில் 7 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால் 22 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றது.ஒவ்வாரு எம்.எல்.ஏ.,வும் 2 வது வாய்ப்பு யாருக்கு அளிக்க விரும்புகிறீர்கள் என்ற அடிப்பைடையில் அ.தி.மு.க., வோ மற்றும் , இடதுசாரிகளோ யாருக்கும் ஓட்டளிக்கவில்லை.32 ஓட்டுக்கள் கைவசம் வைத்திருப்பதால் கனிமொழிக்கே வெற்றி கிடைக்கும் என தி.மு.க.,வினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
காங்கிரஸ் ஆதரவை விஜயகாந்த் கேட்டபோதும் காங்., மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.இலங்கை தமிழர் விவகாரத்தை காரணம் காட்டிஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய தி.மு.க., கனிமொழிக்காக மீண்டும் பேச்சு நடத்தி ஆதரவை பெற்றது , இன்று ஓட்டுப்பதிவு முடிந்து மாலை ஓட்டு நிலவரம் எண்ணி அறிவிக்கப்பட்டது. மொலை 6 மணி வரை சஸ்பென்ஸ் நீடித்தது. முதல்வர் ஜெ., , தி.மு.க., தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் இவரது அதிருப்தி எம்எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர். ஒவ்வொரு கட்சியினருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி ஒட்டளித்தனர்.
கனிமொழி வெற்றி ; ராஜ்யசபா தேர்தலில்,அ.தி.மு.க., கூட்டணி வசம், 170 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், அ.தி.மு.க., வேட்பாளர்கள், நான்கு பேர், இந்திய கம்யூ., வேட்பாளர் ஆகியோர் வெற்றி பெறுவது உறுதி என்றே தெரிவிக்கப்பட்டது. . ஆறாவது இடத்திற்கு போட்டியிடும், தி.மு.க.,விடம், 32 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்.தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள், 29 பேரில், ஏழு பேர், அ.தி.மு.க., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களாக இருந்தனர். இவர்கள் இன்று அ.தி.மு.க.,வுக்கு தங்களின் ஓட்டுக்களை போட்டனர். மீதம், 22 பேர் மட்டும் ஓட்டளித்தனர்.கனிமொழி 31 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். வேட்பு மனு தாக்கல் செய்த போது ஜெயித்துக்காட்டுவேன் என்றார்கனிமொழி . இன்று இதுநிறைவேறி இருக்கிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக