திங்கள், 17 ஜூன், 2013

அத்வானி:மோடிக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் 17 வருட கூட்டணியை இழந்து விட்டோம்

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்த விவகாரம்
காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது. பாரதீய ஜனதாவின் நீண்ட கால கூட்டாளியான ஐக்கிய ஜனதா தளம் விலகியது குறித்து அக்கட்சி வருத்தம் தெரிவித்துள்ளது.;அவசரமாக நரேந்திர மோடிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்ததால், 17 வருட காலம் கூட்டணி கட்சியாக விளங்கிய ஐக்கிய ஜனதா தளத்தை நாம் இழந்துவிட்டோம் என்று ராஜ்நாத் சிங்கிடம் அத்வானி கூறினார்.பாரதீய ஜனதா லோக்சபா எதிர் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியிருப்பது மிகவும் வருத்தமானது, துரதிருஷ்டவசமானது என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக