சனி, 1 ஜூன், 2013

இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி. 10 ஆண்டுகளில் காணாத

 டெல்லி: கடந்த பத்தாண்டுகளில் காணாத கிடுகிடு வீழ்ச்சியைச் சந்தித்து
ஆடிப் போய்க் கிடக்கிறது இந்தியப் பொருளாதாரம். கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் வெறும் 4.8 சத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. இதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் 2012- 2013 ல் மட்டும்தான் 5 சதவீத வளர்ச்சியைக் கூட எட்டாமல் போயுள்ளது இந்தியா.அசாதாரண பணவீக்கம், நிலையற்ற வர்த்தகம், நம்பிக்கையற்ற வர்த்தக சூழல், முதலீட்டில் சரிவு, ஏற்றுமதி வீழ்ச்சி, மேற்கத்திய நாடுகள் அளிக்கும் வாய்ப்புகள் முடங்கியது போன்றவையே இதற்கு காரணமாக அமைந்துள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் இந்த வீழ்ச்சி பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தை மேலும் சந்தைமயப்படுத்தும் வகையில் புதிய சீர்த்திருத்தங்களை மன்மோகன் சிங் அரசு அறிவித்திருந்தது. கடந்த மாதம்தான் ஸ்டான்டார்ட் அன்ட் பூர் நிறுவனம், இந்தியாவின் கடன் திறன் ரேட்டிங் மைனஸுக்குப் போய்விட்டதையும், மீண்டும் சரியான ட்ராக்குக்கு வர மூன்றில் ஒரு பகுதி வாய்ப்பே இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். ஒரு காலத்தில் ஆசியாவின் வலிமை வாய்ந்த பொருளாதார சக்தி என்று வர்ணிக்கப்பட்ட இந்தியா இப்படி வீழ்ச்சி கண்டிருப்பது சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகிறது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக