புதன், 15 மே, 2013

YARSAGUMBA Viagra காளானை பறிக்க மாணவர்களால் போய்விட்டார்கள் பள்ளிகள் மூடல்

YARSAGUMBA - himalayan viagra - Caterpillar fungus (Cordyceps sinensis). One of the best energie booster in traditional Chinese medicine.
காத்மாண்டு : நானூற்றி ஐம்பது கிராம் வயாக்ர காளானை பறித்து கொண்டு வந்தால், ரூ.6.21 லட்சம் கிடைக்கும் என்றால், யார்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள்? பெற்றோர்கள், குழந்தைகளுடன் காளானை பறிப்பதற்காக காட்டுக்கு சென்றுவிட்டதால், நேபாள மலைப்பகுதி கிராமங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.நேபாளத்தில் மலைப்பகுதியில் விளையும் ஒரு வகை காளான், யார்சாகும்பா. இதற்கு இன்னொரு பெயர் இமயமலை வயாக்ரா. அதாவது இந்த காளானை சூப் ஆகவோ, உணவிலோ எதில் சேர்த்து சாப்பிட்டாலும், வயாக்ராவை விட அதிக சக்தி பாலியல் உறவில் கிடைக்குமாம். மேலும், பல கொடிய நோய்களையும் இந்த காளான் சர்வசாதாரணமாக நீக்குகிறதாம். இதனால் சீனா மற்றும் ஆசிய சந்தைகளில் கடும் வரவேற்பு உள்ளது. தங்கத்துக்கு நிகராக இதற்கு விலை கிடைப்பதில் இருந்தே இதன் மதிப்பை தெரிந்து கொள்ளலாம். அதாவது 450 கிராம் யார்சாகும்பா காளானுக்கு ரூ.6.21 லட்சம் வரை விலை கிடைக்கிறது.


தற்போது இமயமலைப் பகுதியில் இதன் அறுவடைக் காலம் தொடங்கி உள்ளது. இதையடுத்து, நேபாளத்தில் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த காளானை தேடி காட்டுப்பகுதிக்கு குழந்தைக்குட்டிகளுடன் சென்றுவிட்டனர். குழந்தைகளே இந்த அறுவடைக் காலத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து கொடுத்து விடுவார்களாம். மேலும், அவர்களால் மலைப்பகுதியில் வேகமாக ஏறி இறங்க முடியும் என்பதும் பெற்றோர்கள் கூறும் மற்றொரு காரணம்.

குழந்தைகளுடன் பெற்றேர்கள் சென்றுவிட்டதால், பள்ளிக்கு மாணவர்கள் வருகையே இல்லை. இதனால் மலைப்பகுதிகளில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இன்னொரு விஷயம், காட்டுப்பகுதியில் கிடைக்கும் காளானுக்கு பல லட்சம் ரூபாய் வரை கிடைப்பதால், ஆசிரியர்களும் அதை தேடி காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டார்களாம்.

ஜாஜர்கோட் மாவட்ட கல்வி அதிகாரி பிரகாஷ் சுபேதி கூறுகையில், ‘‘இந்த மாவட்டத்தில் சுமார் 8,000 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. எல்லோருமே யார்சாகும்பாவை தேடி பெற் றோர்களுடன் காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டனர். சில இடங்களில் ஆசிரியர்களும் சென்றுவிட்டனர். இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு மாற்று ஏற்பாடாக யார்சாகும்பா அறுவடைக் காலம் முடிந்தபின்னர் சிறப்பு வகுப்புகளை நடத்தி விடுவோம்’’ என்றார்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக