திங்கள், 20 மே, 2013

Pakistan இம்ரான் கான் கட்சி பெண் நிர்வாகி சுட்டு கொலை

கராச்சி: இம்ரான் கான் கட்சியை சேர்ந்த மூத்த பெண் நிர்வாகி சுட்டுக்
கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 11ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, நவாஸ் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி படுதோல்வி
அடைந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக் இ இன்சாப் கட்சி தேர்தலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது மேடை சரிந்து படுகாயமடைந்த இம்ரான் கான், லாகூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இம்ரான் கான் கட்சியின் சிந்து மாகாண துணைத் தலைவர் சாரா யூசுப் சாஹித், நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த அவரை மர்ம ஆசாமிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்துக்கு முகைதா குவாமி அமைப்பின் தலைவர் அல்டாப் ஹுசைன் பொறுப்பேற்றுள்ளார். தேர்தலின்போது வாக்களிப்பதை புறக்கணித்த இந்த அமைப்பு, மறுவாக்குப்பதிவு நடந்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து பிரச்னைக்குரிய தொகுதியில் சில நாட்களில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இம்ரான் கான் கட்சி துணைத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில், ‘‘தேர்தலுக்கு முன்பு இருந்தே முகைதா குவாமி அமைப்பின் தலைவர் அல்டாப் ஹுசைன், எனது கட்சி தலைவர்கள், தொண்டர்களை மிரட்டி வந்தார். தற்போது சாரா யூசுப் சாஹித்தை சுட்டு கொலை செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது’’ என்றார். ‘சாரா கொலைக்கான காரணத்தை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. தேர்தல் விரோதமா, கொள்ளை முயற்சியில் கொலை நடந்ததா என்று விசாரணை செய்து வருகிறோம்’ என்று போலீசார் கூறினர்tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக