புதன், 29 மே, 2013

இங்கிலாந்தில் திருமணம் செய்த பாகிஸ்தானிய Lesbian Couples

பாகிஸ்தானைச் சேர்ந்த ஓரினச் சேர்க்கையாளரான பெண்கள் இருவர்
இங்கிலாந்தில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் அங்கேயே தங்குவதற்கு தங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி புகலிடமும் கோரியுள்ளனர். அந்தப் பெண்களில் ஒருவரது பெயர் ரெஹானா கெளசர். 34 வயதாகிறது. இவர் இங்கிலாந்தில் செட்டிலாகி வசித்து வருபவர். இன்னொருவரின் பெயர் சோபியா கமர். 29 வயதாகிறது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இப்போது திருமணமும் செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். 3 வருடத்திற்கு முன்புதான் இருவரும் பிர்மிங்காம் நகரில் வைத்து சந்தித்துக் கொண்டனர். இருவரும் அங்கு பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துக் கொண்டிருந்தபோது சந்திப்பும், கூடவே காதலும் மலர்ந்தது. இருவரும் பின்னர் ஒரு வருட காலம் சேர்ந்தும் வாழ்ந்துள்ளனர். அதாவது கணவன் மனைவி போல வாழ்ந்துள்ளனர்.
கமர் லாகூரைச் சேர்ந்தவர். இந்த இருவரும் தற்போது தாங்கள் இங்கிலாந்திலேயே தொடர்ந்து வசிக்க அனுமதி கோரி அங்கு புகலிடம் வேண்டி விண்ணப்பித்துள்ளனராமம். ஆனால் இந்த இரு பெண்களின் குடும்பத்தினரும் இவர்களின் செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருவருக்கும் முஸ்லீம் பழமைவாதிகளால் ஆபத்து நேரிடுமோ என்றும் அச்சம் அடைந்துள்லனர். இவர்களது திருமணம் எந்த வகையிலும் செல்லாது. மேலும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்குப் புறம்பானது என்பதால் இவர்களுக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படும் என உறவினர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இவர்களின் புகலிட கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு இதுவரை கருத்து tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக