ஐ.பி.எல்.
சூதாட்டத்தில் சென்னை தரகர்களுடன் மும்பை தரகர்களுக்கு தொடர்பிருப்பது
தெரிய வந்துள்ளது என்று சென்னையில் முகாமிட்டு விசாரணை நடத்தும் மும்பை
போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர்
விண்டூ, குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள
ரேடிசன் ப்ளு ஹோட்டல் அதிபர் தலைமறைவானார் என்றும், தலைமறைவாகி உள்ள அவரை
பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், குருநாத் மெய்யப்பனை, நடிகர்
விண்டூவுக்கு ஓட்டல் அதிபர்தான் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் எனவும்
போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது
மனைவி பெயரில் சிம்கார்டு வாங்கி தரகர் கிட்டியுடன் ஓட்டல் அதிபர் 100
முறை பேசியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் அதிபர் வீட்டில் நடந்த
சோதனையில் சிம்கார்டு சிக்காததால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரூபாய் 25 லட்சம் முதல் ரூபாய் 1 கோடி வரை சூதாட்டம் நடந்ததாகவும் போலீசார்
தெரிவிக்கின்றனர்.
சூதாட்ட தரகர்களுக்கு அடைக்கலம் கொடத்த புகாரின் பேரில் ரேடிசன் ப்ளு ஹோட்டலில் சோதனை நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக