பெப்சியிலிருந்து விலகி, சின்னத்திரை டெக்னீஷியன்களுக்காக தனி
சம்மேளனம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. சினிமா வாகன ஓட்டுநர்கள் சங்க உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை நேற்று விஸ்வரூபம் எடுத்ததால் சினிமா, சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புகளை அவர்கள் புறக்கணித்தனர். இதையடுத்து படப்பிடிப்புகள் ரத்து ஆனது. இந்நிலையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னையில் நடந்தது.கூட்டத்துக்கு பிறகு சங்கத்தின் தலைவர் ராதிகா நிருபர்களிடம் கூறியது: தொழிலாளர்கள் தங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னை காரணமாக டிவி படப்பிடிப்புகளை நிறுத்திவிடுகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எபிசோடுகளை குறித்த நேரத்தில் டிவி சேனல்களுக்கு தர முடிவதில்லை. எனவே பெப்சியிலிருந்து விலகி, கேரளா மற்றும் ஆந்திராவில் இருப்பதுபோல் சின்னத்திரை தொழிலாளர்களுக்காக தனி சம்மேளனம் தொடங்கப்படும். மொழி மாற்ற தொடர்களை சமீபகாலமாக டிவியில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் தமிழ் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மொழி மாற்ற தொடர்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றினோம். இவ்வாறு ராதிகா கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக