வெள்ளி, 17 மே, 2013

பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் D-Day திரைப்படத்தில்

இதற்கு முன்பு இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்காததால், தனது
முயற்சியை ரசிகர்கள் எந்த விதத்தில் எடுத்துக்கொள்வார்கள் என்றபயத்துடன் இருந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் D-Day திரைப்படத்தில் வந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனை பாராட்டினார்களாம். இதுபற்றி தனது டுவிட்டர் வலைதளத்தில் ஸ்ருதிஹாசன் “ ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி. அந்தக் கதாபாத்திரத்தை கஷ்டபட்டு சவாலாக எடுத்து நடித்தேன். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார். மும்பையில் நடக்கும் தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதியைக் கண்டுபிடிக்க ஒரு ரா அதிகாரி நியமிக்கப்படுகிறார்.அந்த ரா அதிகாரி மேலும் நடக்கவிருக்கும் குண்டுவெடிப்பை தடுப்பதுடன், தான் காதலிக்கும் பாலியல் தொழிலாளியையும் எப்படி கைபிடிக்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதையாம். இது ஒரு பழைய பிரஞ்சு படத்தின் தழுவலுங்கோ
சில நாட்களுக்கு முன்பு தான் மேக்ஸிம் மேகஸினுக்கு ‘ஹாட்’டாக ஃபோஸ் கொடுத்து ரசிகர்களிடையே பரபரப்பை உண்டாக்கினார் ஸ்ருதிஹாசன். அதைத்தொடர்ந்து இந்த ஃபோட்டோ வெளியாகி ரசிகர்களிடயே மிகுந்த பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக