வியாழன், 16 மே, 2013

அமெரிக்க விஞ்ஞானிகள் மனிதகருவை வெற்றிகரமாக பிரதியாக்கம் செய்து சாதனை

Human cloning has been used to produce early embryos, marking a "significant step" for medicine, say US scientists.
The cloned embryos were used as a source of stem cells, which can make new heart muscle, bone, brain tissue or any other type of cell in the body.

மனிதக் கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர். அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர்.
மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதன் பின்னர் கருக்கட்டாத முட்டையை கருக்கட்டும் குருத்துக் கலங்களாக உருவாவதற்காக மின்சாரத்தின் உதவியுடன் தூண்டியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் குருத்துக்கலங்கள் மனித உடலில் இருக்கக் கூடிய ஏனைய அனைத்து வகைக் கலங்களாகவும் மாற்றப்படக் கூடியவையாகும். இதயம், மூளை மற்றும் எலும்புக் கலங்களாகவும் அவை மாற்றப்படலாம்.
சேதமடைந்த தசைகளை பழுதுபார்க்கவும், நோய்களைக் குணமாக்கவும் இந்த கலங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்தச் சோதனைகளுக்கு ஆதரவானவர்கள் கூறுகிறார்கள் bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக