வெள்ளி, 10 மே, 2013

நல்ல கதைபோதும்! அஜீத்தும் விஜயும் தேவை இல்லை! நடிகை ரம்யா நம்பீசன்

தமிழ்த் திரையுலகத்தில் இரண்டு படங்களுக்கு மேல் வெற்றிபெற்றுவிட்டால் போதும், பெரும்பாலும் நடிகைகள் சொல்லும் வார்த்தை அஜித், விஜய் கூட நடிக்கனும் என்பது தான். தமிழ்த் திரையுலகின் கிளாஸ், மற்றும் மாஸ் ஸ்டார்களான அவர்கள் இருவருடன் நடிக்கவேண்டும் என்ற கனவு எல்லா நடிகைகளுக்கும் இருப்பதில்லை.
அத லிஸ்டில் சேர்ந்திருக்கிறார் ’பீட்சா’ பட நாயகி நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ரம்யா நம்பீசன் “ எல்லாரும் இதே கேள்வியைத் தான் கேப்பீங்களா. எனக்கு அவங்களோட நடிக்க ஆசை இருக்கு. ஆனா கதை ரொம்ப ரொம்ப முக்கியம். நல்ல கதையா இருந்துட்டா அஜித், விஜய் தான் வேணும்னு இல்ல.

எந்த ஹீரோவா இருந்தாலும் ஓகே தான். பீட்சா மாதிரி படத்துல நான் நடிச்சதுக்கு காரணம் கதை தான். கதை தான் முக்கியமே தவிர விஜய், அஜித் போன்ற ஹீரோக்கள் இல்ல” என்று சாதாரணமாக பேசியிருக்கிறார். பீட்சா திரைப்படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் தற்போது சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ரெண்டாவது படம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக