வியாழன், 2 மே, 2013

யாருடா மகேஷ் - சிம்பிளான கதை! சூப்பரான காமெடி

கதை என்று சொல்ல எதுவும் இல்லை. சாதாரண கல்லூரி மாணவன் ஒருவனுடன் பயணிக்கும் உணர்வு தான் இடைவேளை வரை. கல்லூரியில்
நடக்கும் கலாட்டாக்களும், டபுள் மினிங் வசனங்களும் என கலகலப்பாக நகர்கிறது ஒவ்வொரு நிமிடமும்.  ஹீரோ சிவா(சுதீப் கிஷான்), ஹீரோயின் சிந்த்யாவை(டிம்பிள்) காதலிக்கிறார். ’வீட்ல யாரும் இல்ல. BF-க்கு வீட்டுக்கு வந்துடுடா’ என மெஸேஜ் அனுப்பிவிட்டு. சிவா சகல பாதுகாப்புடனும் வீட்டுக்கு வர ’BF-னா Break Fast தானடா’ என வெள்ளந்தியாக ஹீரோயின் கேட்கும்போது சிவாவுக்கு பல்பு.அடுத்த சில காட்சிகளில் சிவாவுக்கும், சிந்த்யாவுக்கும் கசமுசாநடந்து ‘என்னடா இப்படி பண்ணிட்ட’ என ஹீரோயின் கேட்கும் போது ‘இப்ப கேள்வி கேக்குறியே நான் கூப்பிட்டதும் ஏன் நேரா பெட்ரூமுக்குள்ள போன?’ என சிவா கேட்பது சிந்தியாவுக்கு பல்பு. சகலமும் முடிந்து வெளிநாட்டுக்கு படிக்கச் செல்லும் சிந்த்யா கர்பமடைந்ததும் திரும்பி வருகிறார்.சிவாவும் உண்மையான காதல் என்பதால் வீட்டிலேயே பேசி திருமணம் செய்துகொண்டு மனைவியுடனும், குழந்தையுடனும் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். சிவாவின் அமைதியான வாழ்க்கையை புயலென தாக்குகிறது “சிந்தியா கருவுற்றதற்கு சிவா காரணம் அல்ல. மகேஷ் என்பவன்” என்று. ”யாருடா அந்த மகேஷ்” என தன் மனைவியை ஏமாற்றியவனை தேடிச் செல்கிறார் சிவா.(இப்ப தாங்க டைட்டிலே போட்றாங்க) 

சிந்த்யா படித்த கல்லூரியில் படித்தவர்களில் மகேஷ் என்ற பெயருடைய மாணவர்களின் விலாசங்களுடன் மனைவியை ஏமாற்றிய மகேஷைத் தேடிச் செல்கிறார். ஒவ்வொரு மகேஷை சந்திக்கும் போதும் அங்கு நடக்கும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. அப்படி ஒரு மகேஷ் இருக்கிறாரா? இல்லையா? சிவா அந்த மகேஷை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.&சிவாவின் தந்தையாக வரும் லிவிங்ஸ்டன் மகனிடம், ‘நேத்து நைட் ஒரு இங்கிலீஷ் படம் பாத்தியே அத குடுடா’ என்பதும், தந்தையுடன் பைக்கில் செல்லும்போது சைட் அடித்துக்கொண்டே செல்வது, கல்லூரியில் நண்பர்களுக்குள் கலாய்த்துக்கொள்வது, லெக்சரர் முன்பு அடக்கமாகவும், அவர்களுக்குப் பின்னால் குறும்பு செய்வதும் என இளவட்டங்கள் எஞ்ஜாய் பண்ண படம் முழுக்க பல காட்சிகள் இருக்கின்றன.காதலியை இம்ப்ரெஸ் பண்ண வசந்த்(ஜகன்) சிக்ஸர் அடிப்பதும், வசந்தின் ’அந்த’ இடத்தில் சிவா அடிப்பதும் என வசந்துக்கு அடிமேல் அடி படம் முழுக்க இருக்கிறது. எப்படியோ வசந்துக்கு காதலியுடனே திருமணமாக ‘பல்பு பியூஸ் போயிடுச்சேனு கவலைப்படாத 100000 வாட்ஸ் பவர் உள்ள இருக்கு’ என்பதும், மகேஷைத் தேடிச்செல்லும் போது மறுபடியும் சிறுவன் ‘அந்த’ இடத்தில் அடிக்க வயிற்றிலிருக்கும் எலந்தபழம் வாய் வழியாக வெளியே வந்து வெடித்து, அதிலிருந்து இரண்டு குருவிகள் பறந்து செல்லும் போது ‘ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு கூட்டுக் குயிலாக’ பாடல் வருவது என சிரிப்பு வெடிகள் வயிறு வலிக்கச் செய்கின்றன.>டபுள் மீனிங் வசனங்கள் படம் முழுக்க வளைய வந்தாலும் ஆபாசம் அதிகமில்லை. அதிகமில்லை என்பதை விட பொதுவாக பேசிக்கொள்ளும் ஆபாசம் கூட இல்லை எனலாம். பாடல்கள் ஹிட் ஆகி இருந்தால் படத்திற்கு நல்ல ரீச் கிடைத்திருக்கும். இளவட்டங்களை கொஞ்சம் லேட்டாகவே சென்டையும் யாருடா மகேஷ்? என்ற கேள்வி.யாருடா மகேஷ் - சிம்பிளான கதை! சூப்பரான காமெடி!nakkheeran.i

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக