செவ்வாய், 14 மே, 2013

தர்மபுரியில் அதிமுகவினர் மாணவிகளோடு கொழுத்தியதற்கு நஷ்ட ஈடு தந்தார்களா? பாமகா கேள்வி?

வன்முறை செய்யும்
கட்சிகளிடம் இருந்து அதற்கான இழப்பீடு தராசு அலுவலகம் தாக்கப்பட்டு இரண்டு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள். நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டு கணேசன் என்கிற ஊழியர் கொல்லப்பட்டார். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு ஊர்வலம் வந்தபோது, பத்திரிகையாளர்கள் டிஜிபி அலுவலத்திற்குள்ளேயே அடித்து விரட்டப்பட்டார்கள். இத்தனையும் செய்தது அதிமுக. இதுபோன்ற தொடர் வன்முறைகளை செய்யக்கூடியதுதான் அதிமுக. ஆனால் அந்தக் கட்சியினர் இன்றைக்கு சொல்லுகிறார்கள் நாங்கள் வன்முறையை ஆதரிக்க மாட்டோம் என்று. இவ்வாறு கூறினார்.

வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக நீதிப்பேரவையின் வழக்கறிஞர் கே.பாலு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 1992ல் பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அந்த அரசியல் கட்சிகள் அதற்கான இழப்பீடை தரவேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டு, 94ல் திருத்தம் செய்யப்பட்டு நிலையில் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரையில் எத்தனை அரசியல் கட்சிகளிடம் இவர்கள் அதற்கான இழப்பீட்டை பெற்றிருக்கிறார்கள். தர்மபுரியில் பேருந்து எரிக்கப்பட்டதே, அதற்கு அதிமுகவிடம் இந்த அரசு உடனடியாக இழப்பீட்டை பெற வேண்டும். அதிமுகவினர் பல வன்முறைகளை நிகழ்த்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்த டி.என்.சேஷன், அசோகா ஓட்டலில் இருந்து வெளியே வரமுடியாமல் அவர்கள் மீது தாக்குதல், விஜயன் வழக்கறிஞர் மீது தாக்குதல், வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீது தாக்குதல், மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது இளவரசன் என்ற அதிமுக பிரமுகர் தாக்குதல் நடத்தினார். அதற்குப் பிறகு இளவரசனுக்கு பால்வளத்துறையின் தலைவர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் என்று பதவி கொடுத்து அழகு பார்த்த இயக்கம்தான் அதிமுக. ஒரு வன்முறையை யார் செய்கிறார்களோ அவர்களை ஆதரிப்பதும், அவர்களை போற்றுவதும் அதிமுகவினரின் கடந்த கால வரலாறு.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக