திங்கள், 20 மே, 2013

அணிகள் எது பிணிகள் எது ? ஸ்டாலினுக்கு கலைஞரின் எச்சரிக்கை

யாரோ ஒரு நண்பர், அணிகளைப் பற்றி இங்கே
பேசும்போது ஸ்டாலின் கூட குறுக்கிட்டு, அணிகள் பற்றியெல்லாம் இங்கே பேச தேவையில்லை, ஒரு சொற்பொழிவாளர் நடந்து கொள்ள வேண்டிய முறை, அவருக்கு நாம் தருகின்ற வாய்ப்பு, ஆக்கம், ஊக்கம் இதைப் பற்றி பேசினால் போதுமென்று சொன்னார். நான் அதிலே கொஞ்சம் வேறுபடுகிறேன். ஸ்டாலின் இளையவர், என்னைப் போன்ற இவ்வளவு அனுபவத்தை, தி.மு.க.வின் அரசியலில் அவர் முழுதும் இன்னும் உணராதவர், உணர்ந்தவன் என்ற காரணத்தால் இந்த ‘‘அணிகள்'' பெருகினால், இவை ‘‘அணிகளாக'' இருக்காது; கழகத்திற்கு ‘‘பிணிகளாக'' ஆகிவிடும் என்பதற்காகத்தான் இந்த அணிகளையெல்லாம் இப்பொழுதே நாம் திருத்திக்கொள்ள வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன். என்று கலைஞர் குறிப்பட்டது ஸ்டாலின் காதுக்கு எட்டுமா ?
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக