வெள்ளி, 3 மே, 2013

அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

அன்புமணி ராமதாஸ் மீது மாமல்லபுரம் கூட்டத்தில் வன்முறையை தூண்டும்
விதத்தில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் போலீசார் சென்னை டி.நகரில் உள்ள அன்புமணி ராமதாஸ் வீட்டில் இன்று (03.05.2013) காலை அவரை கைது செய்தனர். 2012ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாசை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமதாஸ் கைது செய்யப்பட்டதையடுத்து அன்புமணியையும் கைது செய்துள்ளது காவல்துறை. மேலும் பாமக முக்கிய நிர்வாகிகளையும் அடுத்தடுத்து கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும், காவல்துறை கைதுக்கு அஞ்சி பாமக நிர்வாகிகள் பலர் தலைமறைவாக உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதை பார்த்தால், விழுப்புரம் கோர்ட்டில் இன்று ராமதாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை அவருக்கு சாதகமாக அமையாது என்று பாமகவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக