ஞாயிறு, 5 மே, 2013

பிலாவல் பூட்டோ தீவிரவாதிகள் மிரட்டல் வெளிநாடு பயணம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஇஸ்லாமாபாத்: தீவிரவாதிகள் மிரட்டலால், பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி வெளிநாடு சென்றார். வரும் 11ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பிலாவலின் பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவராக இருப்பவர் பிலாவல் புட்டோ சர்தாரி (24). இவர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி & சுட்டுக் கொல்லப்பட்ட பெனசிர் புட்டோ தம்பதியின் மகன். பாகிஸ்தானில் வரும் 11ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக முக்கிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால், தேர்தலில் ஓட்டுப் போட கூடாது, வேட்பாளர்களை சுட்டுக் கொல்வோம் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்
அதற்கேற்ப பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கராச்சியில் நேற்று வேட்பாளர் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் ஆளும் கட்சி தலைவர் பிலாவல் புட்டோவின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று வெளிநாடு சென்றார் என்றும் தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபடவில்லை என்றும் பிரபல நாளிதழ் டான் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் தாஜ் ஹைதர் கூறுகையில், Ôபிலாவல் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதால் அவர் வெளிநாடு சென்றது உண்மைதான். நாங்கள் ஏற்கனவே பெனசிர் புட்டோவை இழந்து விட்டோம். அதே நிலைமை பிலாவலுக்கு ஏற்பட கூடாது என்றார். எனினும், பிலாவல் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் எந்த தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக