வியாழன், 16 மே, 2013

ஹெலிகொப்டர் மூலம் ஆப்பிள் தோட்டத்திற்கு உஷ்ணம் ஏற்றும் கனடா விவசாயி

 Canadian Apple Farmer Uses Helicopter to Save Crops from Frost

கனடா நாட்டு தலைநகர் ஒட்டாவா அருகே உள்ள ஆப்பிள் தோட்டம் ஒன்றில் இந்த வாரம் குளிர் அதிகமானதை அடுத்து, ஹெலிகாப்டரை தருவிக்க வேண்டிய நிலை, ஆப்பிள் தோட்டக்காரருக்கு ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பனிப்படலம் மூடிக்கொள்ளும் என்ற காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தோட்டக்காரர் ஃபில் லியாலுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து, அவரது ஆப்பிள் தோட்டத்தில் தாழப் பறந்து, ஆப்பிள் மரங்கள் மீது வெப்பக் காற்றை அடிக்க வேண்டியதாயிற்று. தோட்டக்காரர் ஃபில் லியால், “ஒரு நாள் இரவு ஆப்பிள் மரங்களை பனிப்படலம் மூடிக்கொண்டால், 90 சதவீத ஆப்பிள்கள் அழிந்து விடும். எனவே செலவு அதிகமானாலும், இந்த நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை” என்கிறார்.
இந்த இக்கட்டான நிலை கனடா நாட்டு ஆப்பிள் தோட்டக்காரர்களுக்கு மாத்திரம் என்றில்லை, தெற்கே அமெரிக்காவிலும், புளோரிடா மற்றும் டெக்சாஸ் மாநில தோட்டக்காரர்களும், இப்படியான எக்ஸ்பென்சிவ் ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டிய நிலை அவ்வப்போது ஏற்படுகிறது. அமெரிக்க மாநிலம் மிச்சிகனில் கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் ஏற்பட்ட திடீர் குளிர் காலநிலையால், மாநிலம் முழுவதிலும் இருந்த ஆப்பிள்கள் அழுகிப் போகும் நிலை ஏற்பட்டது என்று மிச்சிகன் நேஷனல் பப்ளிக் ரேடியோ தெரிவித்தது.
ஆயில் மூலம் இயங்கும் smudge potsகளை மரங்களுக்கு கீழே வைத்து, புகை உருவாக்கியதன் மூலமும், ஹெலிகாப்டர் மூலம் வெப்பக் காற்றை அடித்ததன் மூலமுமே அங்கே கடந்த ஆண்டு ஆப்பிள்கள் தப்பித்துக் கொண்டன. >விறுவிறுப்பு.காம்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக