வெள்ளி, 10 மே, 2013

கர்நாடகா சித்தாரமையா முதல் மந்திரியாக தெரிவு

கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டசபைக்கு முதல் மந்திரியாக தேர்வு
செய்யப்பட்ட சித்தராமைய்யாவுக்கு, தி.மு.க. தலைவர் கலைஞர் அனுப்பிய வாழ்த்து செய்தியில்,  ‘’கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டசபைக்கு முதல் மந்திரியாக தாங்கள் தேர்வு செய்யப்பட்டதால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தாங்கள் தேர்வு பெற்றதற்கு என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய நீண்ட கால அனுபவம் கர்நாடக மாநில பிரச்சினைகளை தீர்க்கவும், ஏழைகள் மற்றும் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவர்களை பாதுகாக்கவும் உதவும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அத்துடன் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களும் உங்கள் கைகளில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், இனிமையான பதவியும் கிடைக்க வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கூறி உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக