பா.ம.க., மீது, தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை தடுக்க, மத்திய அரசின் உதவியை, அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி நாடியுள்ளார்.ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க, டில்லி சென்றுள்ள அன்புமணி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, நேற்று முன்தினம் சந்தித்தார். 30 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின் போது, பா.ம.க., மீது வீண் பழி சுமத்தி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, ஜனாதிபதியிடம் அவர் தெரிவித்ததோடு, மனு ஒன்றையும் அளித்துள்ளார்.
மனுவில், மரக்காணம் சம்பவம் தொடர்பாக, பா.ம.க.,வின் நிலை, விவரிக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. பா.ம.க., மீது வீண் பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கில், பொது சொத்துகளின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லி என்ன வாஷிங்டன் சென்றாலும் செய்தது முழு அடாவடி. பெட்ரோல் குண்டு எரிவது, பேருந்துகளுக்கு தீ வைப்பது போன்றவை தீவிரவாதிகள் செய்யும் செயல். அம்மா மட்டும் அல்ல எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் இவர்களை பல்லை பிடுங்கவே நடவடிக்கை எடுக்கும்
ஆனால், கலவரத்தில் ஈடுபட்டதாகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும், பா.ம.க.,வின் அப்பாவித் தொண்டர்களை, குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில், தமிழக அரசு கைது செய்துள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.கட்சியின் நிறுவனர் ராமதாசை, தேவையில்லாமல் சிறையில் அடைத்ததோடு, ஜாமின் கிடைத்தும் அவரை விடுதலை செய்ய விடாமல், தொடர் வழக்குகளை, தமிழக அரசு தொடர்ந்தது. இதனால், ராமதாசுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, இருதய அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதையும், மனுவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பா.ம.க.,வை அச்சுறுத்தும் வகையிலும், அழித்து விடும் நோக்கிலும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, மாநில அரசின் நடவடிக்கைகளைத் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் அன்புமணி கூறியுள்ளதாக கூறுகின்றனர்.ஜனாதிபதியிடம் தெரிவித்த அதே கருத்துக்களை, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமும் தெரிவிக்க, அன்புமணி உத்தேசித்துள்ளார் என, பா.ம.க., வட்டாரங்கள் கூறுகின்றன.
டில்லியில் முகாம்: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே ஆகியோர், வெளிநாடு சென்றுள்ளதால், அவர்களை, அன்புமணியால் சந்திக்க முடியவில்லை. அவர்கள் நாடு திரும்பியதும், சந்தித்துவிட்டு திரும்ப, டில்லியில் அவர் முகாமிட்டுள்ளார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர், இன்று நாடு திரும்புவர் என, எதிர்பார்க்கப்படுகிறது."பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்கு, பா.ம.க.,விடம் நஷ்ட ஈடு வசூலிக்க வழக்குத் தொடரப்படும். வன்முறை தொடர்ந்தால், பா.ம.க., தடை செய்யப்படும்' என்ற, தமிழக அரசின் அறிவிப்புகள், பா.ம.க.,வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
பா.ம.க.,வை பழி வாங்குவதற்காக, தமிழக அரசு இதுபோல செயல்படுகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளில், அரசியல் பின்னணி உள்ளது. எனவே, மத்திய அரசு தலையிட வேண்டும் என, பா.ம.க., கோரிக்கை விடுக்கிறது.பா.ம.க.,வின் கோரிக்கைளை ஏற்று, மத்திய அரசு தலையிட முடியுமா என்பது கேள்விக்குறி தான் என, சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதும், இரு பிரிவினரிடையே ஏற்படும் கலவரத்தை தடுப்பது மாநில அரசின் கடமை.
எனவே, இதில், ஒரு சாராரின் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது. மேலும், சம்பவம் தொடர்பாக, வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில், உரிய எதிர் கருத்துக்களை, பா.ம.க., முன் வைக்கலாம் எனவும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அன்புமணியின் டில்லி பயணம், எந்தளவுக்கு அக்கட்சிக்கு உதவும் என, தெரியவில்லை என்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக