லக்னோ: உத்தர பிரதேசத்தில் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் கோராவல் பகுதியைச் சேர்ந்த 14
வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் நடந்த திருமண
நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது சிலர் சிறுமியை கடத்திச் சென்று
கற்பழித்து, கழுத்தை நெறித்துக் கொன்றனர். இதற்கிடையே சிறுமியின்
குடும்பத்தார் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை திருமணம் நடந்த இடத்திற்கு அருகே
சிறுமியின் உடல் கிடந்தது. பிரதே பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டது தெரிய வந்தது.
மேலும் பிஜ்னர் மாவட்டம் ஷிவாலா கலன் பகுதியில் 12 வயது சிறுமியை 3 பேர்
சேர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது
குறித்து ரிதேஷ், ரீனு, அர்ஜுன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு
செய்துள்ளனர். அதில் ரிதேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று பினாவர் பகுதியில் 6 வயது சிறுமியை
21 வயது வாலிபர் கற்பழித்துள்ளார். இதையடுத்து சிறுமியை கற்பழித்த அன்னு
என்பவரை போலீசார் கைது செய்தனர்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
ஒரு சிறிய உதவி..
பதிலளிநீக்குமின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.
படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்
http://kannimaralibrary.co.in/power9/
http://kannimaralibrary.co.in/power8/
http://kannimaralibrary.co.in/power7/
http://kannimaralibrary.co.in/power6/
http://kannimaralibrary.co.in/power5/
http://kannimaralibrary.co.in/power4/
http://kannimaralibrary.co.in/power3/
http://kannimaralibrary.co.in/power2/
http://kannimaralibrary.co.in/power1/
நன்றி,
வினோத்.