டோணியின் வியூகங்களை புக்கீகளுக்கு லீக் செய்த மெய்யப்பன்
பெட்டிங்கில் இழந்த பணத்தை சம்பாதிக்க டோணியின் வியூகங்களை புக்கீகளுக்கு லீக் செய்த மெய்யப்பன்
மும்பை: ஐபில் சூதாட்டத்தில் கைதான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓ
குருநாத் மெய்யப்பன் தான் பெட்டிங்கில் இழந்த பணத்தை சம்பாதிக்க தனது
அணியின் வியூகங்களை தரகர்களுக்கு தெரிவித்ததாக போலீசாரிடம்
தெரிவித்துள்ளார்.ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்புடைய மறைந்த பாலிவுட்
நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும்,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசனின் மருமகனும்,
அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன் சார்பில் பெட்டிங்கில் ஈடுபட்டதாக
தெரிவித்தார்.இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மும்பையில் வைத்து குருநாத்
மெய்யப்பன் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் மெய்யப்பன் விசாரணையில்
கூறுகையில்,பெட் கட்டி 3-4 போட்டிகளிலேயே ரூ. 1 கோடியை இழந்தேன். இழந்த
பணத்தை சம்பாதிக்க சென்னை அணியின் வியூகங்கள் மற்றும் சில தகவல்களை
தரகர்களுக்கு தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.இன்று இரவு கொல்கத்தாவில்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மேதும் இறுதிப்
போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக