வியாழன், 23 மே, 2013

பா.ஜ.க பா.ம.கவுடன் ரகசிய பேச்சு?ராமதாசுக்கு எதிராக வைகோவை தூண்டிய ஜெயலலிதா? நடைப்பயண நாடகம்

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
பா.ஜ.க. – பா.ம.க. ரகசியமாக பேசுவது தெரியுமா?
என் பத்திரிகை நண்பர்கள் வழியாக கேள்விப்பட்ட வகையில், பா.ஜ.க தலைமை பா.ம.கவுடன் ரகசிய பேச்சு வார்த்தைகளை தொடங்கி விட்டது. பா.ஜ.க கூட்டணிக்கு அ.தி.மு.க. பிடி கொடுக்காமல் இருப்பதால் மாற்று வழியாக பா.ம.க.வை யோசிக்க ஆரம்பித்து விட்டது.
பா.ஜ.க.விலே ஒரு சிலர் அதிமுகவை விரும்பவில்லை. வாஜ்பாய் அரசை கவிழ்த்தது இன்னும் மறக்கவில்லை.
ஒரு வேளை அ.தி.மு.க.வுடன் கூட்டு போட்டு வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா கடுமையான நிர்பந்தங்கள் செய்வார் என்று பா.ஜ.க நினைக்கிறது. ஜெயலலிதாவுக்கு எப்படியாவது ஒரு நாளாவது பிரதமர் ஆக வேண்டும் என்ற வெறியில் என்ன வேணுமானாலும் செய்வார் என்று பா.ஜ.க தலைமை நினைக்கிறது.
வை.கோ. திடீரென எதற்காக நடைப்பயணம்?
சமீப வாரங்களில் பா.ம.க அதிமுக வாக்கு வங்கியை சிதைத்து வருகிறது. மது ஒழிப்பு பிரசாரத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கியவுடன், மகளிர் ஓட்டு சிதையும் என்று வைகோவை மது ஒழிப்புக்கு நடை பயணம் செய்ய தூண்டியவரே ஜெயலலிதா தான்.

பா.ம.கவுக்கு அந்த பெயர் முழுதும் போகாமல் நீர்த்து போக செய்யும் திட்டம்தான் வைகோவின் நடைப்பயணம்.
பா.ம.க.வுக்கு செல்வாக்கு ஏறுகிறது!
டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான நடவடிக்கை எடுத்தது மற்ற சாதி இந்துக்களிடையே நல்ல பெயர் வாங்கி தந்துள்ளது. செட்டியார், முதலியார், கவுண்டர், தேவர் என கணிசமான சாதி இந்துக்கள் பா.ம.க நோக்கி வர ஆரம்பித்து விட்டனர்.
இதையெல்லாம் கணக்கு பார்த்த பா.ஜ.க அதிமுக கூட்டணி அமையவில்லை என்றால் பா.ஜ.க + பா.ம.க + மற்ற சாதி அமைப்புக்களுடன் கூட்டணி போட ஆழம் பார்க்கிறது.
ராமதாஸ் குணமானதும் அதிரடி திட்டம் ரெடி!
டாக்டர் ராமதாஸ் ஜெயிலுக்கு சென்று இப்போது அறுவை சிகிச்சை செய்து வருவது வன்னிய குலத்தில் அனுதாபத்தை கொடுத்துள்ளது. அவர் சரியானவுடன், டாஸ்மாக் கடைகளை அதிரடியாக நொறுக்க திட்டம் வகுத்துள்ளது பா.ம.க.
இது நிச்சயம் அ.தி.மு.க.வின் மகளிர் ஓட்டு வங்கியை பதம் பாக்கும்.
பா.ம.கவின் வளர்ச்சி தே.தி.மு.கவை பாதிக்காது, ஆனால் அ.தி.மு.க.வை கடுமையாக பாதிக்கும். வட மாவட்ட வன்னிய சாதி ஓட்டுக்களை அ.தி.மு.க.விடம் இருந்து ராமதாஸ் பிரிப்பார். தென் மாவட்ட தேவர் ஓட்டும் பிரியும்.
நாடார், தலித்து ஓட்டுக்கள் அ.தி.மு.க.வுக்கு விழ வாய்ப்புக்கள் குறைவு. மேற்கு மாவட்டத்திலும் கொங்கு வெள்ளாள மக்களிடையே பா.ம.க தாக்கம் உள்ளது. பா.ம.க மற்றும் மற்ற சாதி இந்துக்கள் கூட்டணி வளர்ச்சி கண்டு பயந்தே ஜெயலலிதா பா.ம.க மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கேப்டன்… மும்முனை போட்டிக்கு இருக்கிறது சான்ஸ்
பா.ஜ.க மற்றும் பா.ம.க என்று ஒரு மூன்றாவது அணி அமைந்தால், அ.தி.மு.க. கடுமையாக பாதிக்கப்படும். தே.தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், கம்யுனிஸ்ட் என்று அமைத்தால் அது மும்முனை போட்டி உருவாக்கும்.
தி.மு.க.வை கழட்டி விட்டு தே.தி.மு.கவுடன் வர காங்கிரசுக்கு இது தோதுவாக அமையும்.
பா.ம.க தலைமையில் அமையும் மூன்றாவது அணி உங்கள் அரசியல் எதிரியான அ.தி.மு.க.வைத்தான் பாதிக்கும்.
எனவே, பா.ம.கவை கடுமையாக எதிர்க்காமல் இருப்பது தே.தி.மு.கவுக்கு நல்லது. அரசியல் தந்திரத்துடன் செயல்பட்டால் தே.தி.மு.கவுக்கு பலன் இருக்கும்.
- உங்கள் பத்திரிக்கையாள நண்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக