ஞாயிறு, 5 மே, 2013

தெலுங்கு சினிமா சித்தப்புக்களின் லொள்ளு ஜொள்ளு


கொஞ்சம் கலராய்க் கண்ணை அடிக்கும் கலரில் டிரெஸ் போட்டிருந்தால்
'தெலுங்கு சினிமா ஹீரோவாட்டம் இருக்கியே மச்சான்’ என்பார்கள். தெலுங்கு சினிமாவில் கலர் மட்டுமா கண்ணை அடிக்குது? இதோ எது எது எப்படியெல்லாம் வெரட்டி அடிக்குதுனு கொஞ்சம் அலசி ஆராய்வோமா?  அது என்னமோ தெரியலை. பொதுவாகவே சீனியர் ஆந்திர ஹீரோக்களின் டான்ஸில் பாத்ரூம் போகும் அவசரம் தெரியும். இடுப்பை வெட்டி வெட்டி இவர்கள் ஆடுவதைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இப்ப இருக்கும் யூத் ஹீரோஸ் பட்டையைக் கிளப்பினாலும் பல வருடங்களாக டான்ஸில் பதறவைத்தவர்கள் சீனியர்கள்.

ஆந்திர சூப்பர் ஸ்டார்... முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் ஆன்மா மன்னிக்கட்டும். தன் தள்ளாத வயதிலும் பொருந்தாத விக்கோடும், பிதுங்கும் தொப்பையோடும் தளதளக்கும் பின்புறத்தை வித்தியாசமாகக் காட்டும் காஸ்ட்யூம் அணிந்து நம்மூர் ஸ்ரீதேவியோடு மூக்கும் மூக்கும் இச்சிக்கொண்டு ரொமான்ஸ் டான்ஸ் ஆடுவார் பாருங்க. மைண்ட் புளோயிங்.
என்.டி.ஆருக்கு 80-களில் செம டஃப் ஃபைட் கொடுத்தது இப்போது ஆந்திராவில் கலக்கி எடுக்கும் மகேஷ்பாபுவின் அப்பா கிருஷ்ணாதான். சாருக்கு 'எவர்க்ரீன் ஸ்டார்’ என்ற பெயர் உண்டு. நம்மூர் சத்யராஜைவிட விக் அதிகம் யூஸ் பண்ணியது இவராகத்தான் இருக்கும். மகன் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தபோதும் பிடிவாதமாக ரெண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்களில் நடித்துக் கலக்கியவர். ரஜினியை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு காஸ்ட்யூமில் அசத்தி எடுப்பார். 90-களில் ஒரு படத்தில் ரம்பாவும் மீனாவும் இவரை உருகி உருகிக் காதலிப்பார்கள். ட்ரீம் சாங்கில் ரோஜா ஒரு பாட்டுக்கு வந்து செம குத்தாட்டம் போட்டுவிட்டுப் போவார். அப்புறம் ஏன் சுனாமி வராது?
டாக்டர் ராஜசேகர்னு ஒருத்தர் இருக்கார். இவரோட படங்கள் அம்புட்டும் டெரர் டேர் டெவில்.  தக்காளிச் சட்னி முகத்தில் வழிந்தபடி ஆக்ரோஷமாக வில்லன்களுக்கு சவால் விட்டுக்கொண்டிருப்பார். அப்போது கை நீட்டி இவரைக் கேவலமாகப் பேசுவார் வில்லனின் தம்பி. டாக்டருக்கு வரும் பாருங்க கோபம். அப்படியே பாய்ந்துபோய் ஒரு கையால் எதிரியின் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் எதிரியின் கையை வெறிகொண்டு இழுப்பார். கை அப்படியே தனியாகப் பிய்ந்து இவர் கையோடு வந்துவிடும். ரத்தம் பீய்ச்சி அடிக்கும். இவ்வளவு ரணகளத்தையும் கோர்ட்டில் குற்ற வாளிக் கூண்டில் நின்றுகொண்டு செய்வார்னா பார்த்துக்குங்க. அது போதாதுனு பக்கம் பக்கமாய் டயலாக் செப்பித் துப்புவார். நம்புங்க மக்கா... தமிழில் அந்தப் படத்தின் டயலாக்கில் அப்படியே கெட்ட வார்த்தை ஒன்றையும் போட்டு எழுதிக் கொடுத்திருப்பார் வசனகர்த்தா. (யார்னுதான் தெரியலை பாஸ்!)
என்.டி.ஆரின் வாரிசு பாலகிருஷ்ணாதான் இதில் எக்ஸ்ட்ரீம். ரம்பா போன்ற தொடையோடு இவர் ஆடும் டான்ஸ்களை, சாப்பிடும்போது தயவுசெய்து பார்த்துவிடாதீர்கள். புரையேறிச் சாகும் அபாயம் உண்டு. நம்ம கேப்டனுக்கே சவால் விடும் ஆள் இவர். புரியலையா? பல படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுளுக்கெடுத்தவர். ஒரு படத்தில் பாராசூட்டில் பாகிஸ்தானுக்குப் போய் தீவிரவாதிகளைப் பூண்டோடும் இஞ்சி கசகசாவோடும் அழிப்பார். உடல்பலத்தை எல்லாம் விடுங்க. ஒரு படத்தில் ரயில் மேல் நின்றுகொண்டு மனதில் கடவுளை நினைத்துக்கொண்டு பஞ்ச் டயலாக்கோடு ரயிலை திரும்பிப் போகச் சொல்லி விரலை அசைப்பார். ரயிலும் அப்படியே வேகமாக ரிவர்ஸில் போகும். இன்னொரு படத்தில் பாலகிருஷ்ணாவை சேரில் கட்டி வைத்து எதிரில் அவர் சகோதரர் உடலில் பாம் செட் செய்துவிட்டு வில்லன்கள் அயர்ந்து தூங்கிவிடுவார்கள்(?). ஷெல் எனப்படும் புல்லட் கேப்கள் சிதறிக்கிடப்பதை உட்கார்ந்தபடி கவனிக்கும் பாலகிருஷ்ணா அப்படியே சேரோடு சாய்ந்து ஷெல்லை வாயில் கவ்வி எடுப்பார். பிறகு அதை நெற்றியில் வைத்துக் குறிபார்த்து டைம் பாம் மீது துப்புவார். அப்படியே ஷெல் பறந்து போய் சிவப்பு 'டிஃப்யூஸ்’  பட்டனை ஆஃப் செய்து விடும். இங்கு நீங்கள் உலகின் மிக எளிமையான 'யூஸர் ஃப்ரெண்ட்லி பாம்’ தயாரித்த கலை இயக்குநரைப் பாராட்டுவதா? அல்லது பாலகிருஷ்ணாவின் சாதுர்யத்தைப் பாராட்டுவதா? என  ஷாக் ஆகிப் போவீர்கள். 'பாலைய்யா காமெடி’ என யூ-டியூப் எங்கும் வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும் மனிதர் அசராமல் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவ்ளோதான் 'பார்ட்டிக்குக் கிழடு தட்டிருச்சு’ என தெலுங்கு மீடியாக்கள் வசைபாட, சமீபத்திய ரிலீஸான 'ஸ்ரீமன் நாராயணா’வில் இவருக்குப் பார்வதி மெல்டன், இஷா சாவ்லா என இரண்டு ஜோடி. படமும் பிக்-அப் ஆகி கலெக்ஷன் காட்டிவிட அடுத்த யூத் சப்ஜெக்ட்டுக்குத் தயாராகி வருகிறாராம் பாலைய்யா.
பாலகிருஷ்ணாவுக்கு ஹரிகிருஷ்ணா என்ற அண்ணன் உண்டு. தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி-யாகவெல்லாம் இருந்தவர். சற்றே பருத்த சரீரத்தோடு இருந்தாலும் மனுஷனுக்கு சினிமாவில் தம்பிபோல ஒரு ரவுண்டு வரணும்னு ஆசை. ஏழெட்டுப் படங்கள் ஜிகுஜிகு காஸ்ட்யூமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக