செவ்வாய், 7 மே, 2013

எகிறப்போகும் எமியின் மார்கெட்! ஐ படத்தை எதிர்பார்த்து கல்லா

“மதராசப்பட்டினம்” படத்தில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் முதல்
படத்திலேயே நடிப்பிலும்,அழகிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்.
Amy-Jakson-20130507-01தொடர்ந்து ஹிந்தி வெர்ஷனான “விண்ணைத் தாண்டி வருவாயா”, அதன்பிறகு அதே விஜய் இயக்கத்தில், “தாண்டவம்’ இப்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ஐ என படுபிஸியாக நடித்து வருகிறார்.
இதுவரை இல்லாத அளவுக்கு ‘ஐ’ படத்தில் விக்ரமுடன் படு நெருக்கம் காட்டியிருக்கிறாராம் எமிஜாக்சன்.

இந்த படத்தில் ஷங்கர் படங்களின் வழக்கமான ஹீரோயினைப் போல இல்லாமல் எமியை அழகு தேவதையாக காண்பிக்கும் பிரமாண்ட பாடலும் உள்ளதாம். அது மட்டுமில்லாமல், அவருக்கும், விக்ரமுக்கும் இடையிலான ரொமான்ஸ் காட்சிகளை செம சூட்டை கிளப்பும் விதமாக, புதுமையான முறையில் படமாக்கி வருகிறாராம் ஷங்கர்.

அதனால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார் எமி.
இந்த நிலையில், ‘ஐ’ படத்துக்குப்பிறகு எமியின் மார்க்கெட் எகிறி விடும் என்பதை யூகித்து விட்ட பல தயாரிப்பாளர்கள் இப்போதே அவருக்கு ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து புக் பண்ணி வைக்க எமியை நெருக்கி வருகிறார்களாம்.
ஆனால், அவரோ, ஐ படத்துக்குப் பிறகுதான் அடுத்த படத்திற்கான கதையையே கேட்பேன் என்று நழுவிக் கொண்டு வருகிறாராம்.
எமி ரொம்ப உஷார் தான்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக