வியாழன், 30 மே, 2013

சூதாட்ட தரகர்களின் ரகசிய வார்த்தைகள்:ஹெலிகாப்டர் ,ராவன்,மக்கி ,மாடல் ,ரோட்று இன்னும் பல

ஐ.பி.எல். சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டது. எந்த ஒரு
போட்டியிலும் இல்லாத வகையில் ஐ.பி.எல். போட்டியில் மிகப்பெரிய அளவில் பெட்டிங் (பந்தயம்) நடைபெற்றுள்ளது. சூதாட்ட தரகர்கள் மூலம் நிழல் உலக தாதாக்கள் கிரிக்கெட் பெட்டிங்கில் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து உள்ளனர். இதில் வீரர்களை சிக்க வைத்து அதற்கு ஏற்ற வழியில் நடந்தால் சூதாட்டத்தில் லாபம் மிகப்பெரிய அளவில் கிடைக்கும். சூதாட்ட தரகர்கள் பெட்டிங் விவகாரத்தை பேசும்போது, ரகசிய வார்த்தைகளைத் தான் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. டெலிபோன் உரையாடல் பதிவு மூலம் ரகசிய வார்த்தைகள் தெரியவந்தது. மேலும் சூதாட்ட தரகர்களிடம் இருந்து கைப்பற்றிப்பட்ட ஐபேடு, டைரி மூலம் பல்வேறு ரகசிய வார்த்தைகள் இருந்தது. இந்திய அணி கேப்டன் டோனியை சூதாட்ட தரகர்கள் ஹெலிகாப்டர் என்ற ரகசிய வார்த்தைகள் மூலம் பரிமாறிக்கொண்டது தெரியவந்தது. கிறிஸ்கெய்லை ராவண் என்றும், மலிங்காவை மக்கி என்றும், யுவராஜ்சிங்கை மாடல் என்றும் ஸ்ரீசாந்தை ரோட்ரு என்றும் சூதாட்ட தரகர்கள் ரகசிய வார்த்தைகளால் குறிப்பிட்டு உள்ளனர்.
கைதான இந்தி நடிகர் விண்டூ தாராசிங் ஜேக், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுர உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் குருஜி என்று சூதாட்ட தரகர்கள் அழைத்தது டெலிபோன் உரையாடல் மூலம் தெரிந்ததுmaalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக