ஞாயிறு, 5 மே, 2013

கர்நாடக BJP க்கு எடியூரப்பாவின் ஆப்பு ! மாபியாக்களின் கை ஓங்குமா?

பெங்களூர்:கர்நாடகாவில் இன்று சட்டசபைக்கான தேர்தல் நடக்கிறது.
கர்நாடகாவில் முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சி, 5 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. இந்நிலையில் கட்சியில் பல்வேறு பிரச்சினை மற்றும் எடியூரப்பா விலகல் ஆகிய காரணங்களால் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.பி.ஜே.பி.,யிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுவதால், அவரது லிங்காயத் சமுதாயத்தினரின் வாக்குகள் பிரிந்து பாரதீய ஜனதாவுக்கு சவாலாக இருப்பார்‌ என்று சொல்லப்படுகிறது.இதனை தொடர்ந்து காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் மீண்டும் ஆட்சி அமைக்க இரு கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் குமாரசாமியின் முக்கிய கட்சியாக மதசார்பற்ற ஜனதா தளமும் விளங்குவதால், இந்த கர்நாடகா சட்டசபை தேர்தல் மிகுந்த பரபரப்பாக்கி உள்ளது.தேர்தலுக்கு முன்பான கருத்துகணிப்பில் காங்கிரஸ்க்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என சொல்லப்படுகிறது.இந்நிலையில் இந்த சட்டசபை தேர்தல் பி,ஜே.பி.,க்கு பலத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்ப்பை ஏற்பத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக