வெள்ளி, 17 மே, 2013

ஸ்ரீசாந்த், சாண்டிலாவுக்கு 3 முறை பெண்களை சப்ளை செய்த புக்கிகள்

டெல்லி: பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஐபிஎல் ஸ்பாட்
பிக்சிங் விவகாரத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்களையும் புக்கிகள் சப்ளை செய்ததாக டெல்லி போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். நடப்பு ஐபிஎல் 6வது கிரிக்கெட் தொடரின் கரும்புள்ளியாக ஸ்பாட் பிக்சிங் விவகாரம் அமைந்திருக்கிறது. டெல்லி போலீஸ் அதிகாரி பத்ரீஷ் தத்தின் மர்ம மரணத்தின் மூலம் அம்பலத்துக்கு வந்த கிரிக்கெட் மோசடியில் அடுத்தடுத்து புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிக்கிய புக்கிகளான மனான் மற்றும் சந்த் ஆகிய இருவரும் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா ஆகியோருக்கு 3 முறை பெண்களை "ஏற்பாடு" செய்து கொடுத்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது சிக்கியுள்ள தொலைபேசி உரையாடல்களில் "சப்ளை" செய்யப்பட்ட பெண்கள் அனுப்பி வைக்கப்பட்ட மற்றும் சென்றடைந்த நேரங்கள் பதிவாகி இருக்கின்றன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் ஸ்ரீசாந்தும் அவரது நண்பரான பிஜூ என்ற ஜிஜூவும் மும்பை ஹார் பகுதியில் பெண்களுடன் இருந்தபோதுதான் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவருமே ஆர்ஜி நைட் கிளப்புக்கும் தனித்தனியாக கார்களில் சென்றதையும் போலீசார் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இது உண்மைதான் என்று கூறும் டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், புக்கிகள் பெண்களை இரண்டு வீரர்களுக்கு "சப்ளை" செய்தது உண்மைதான்.. ஆனால் அந்த பெண்கள் ஸ்பாட் பிக்சிங்சில் ஈடுபடாததால் அவர்கள் மீது வ்ழக்கு போடுவது முடியாத ஒன்று என்றும் கூறியுள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக