ஞாயிறு, 19 மே, 2013

10 கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்டத்தில் பங்கு?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.அப்போது பிடிபட்ட 3 பேரும், குறைந்தபட்சம் 5 ஐ.பி.எல். அணிகளை சேர்ந்த 10 கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த சூதாட்டத்தில் பங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் எங்கள் விசாரணை பாதிக்கும் என்பதால் அந்த 10 பேரின் பெயர்களை வெளியிட முடியாது என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக