செவ்வாய், 16 ஏப்ரல், 2013

UP: ஏழைகளின் நலன் கருதி 25 ரூபாய்க்கு மலிவு விலை மது!

உத்தரபிரதேசத்தில் கடந்த 1–ந்தேதி மதுபானங்களின் விலை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து குவார்ட்டர் மது, ரூ.50 ஆக உயர்ந்தது. ஆனால், அண்டை மாநிலமான அரியானாவில் 30–க்கு குவார்ட்டர் கிடைக்கிறது.இதனால் உத்தரபிரதேச ‘குடிமகன்’கள், அரியானாவுக்கு படையெடுத்து சென்று மது வாங்க தொடங்கினர். சிலர் அரியானாவில் இருந்து மதுவை கடத்தி வந்து உ.பி.யில் விற்க தொடங்கினர். சிலர் கலப்படம் செய்தும் விற்க தொடங்கினர். அது, குடிமகன்களின் உடல்நலனுக்கு தீங்கானது என்று கருதிய உத்தரபிரதேச மாநில அரசு, ஏழைகள் நலனுக்காக நேற்று மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது. வார்ட்டர் மது பாட்டில், ரூ.25 என்ற குறைந்த விலைக்கு இந்த மது கிடைக்கிறது. அரியானா மாநில எல்லை யோரத்தில், குறிப்பிட்ட மதுக்கடைகளில் மட்டும் இந்த மது கிடைக்கும். இதன்மூலம், மது கடத்தல் குறையும் என்று ஆயத்தீர்வை துறை அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக