சனி, 6 ஏப்ரல், 2013

SunTV மன்மத’ ராஜா மீது கொலை வழக்கு?

SP_Reporter_Poster_31-3-2013.pdf
பாலியல் வழக்கில் சிக்கிய சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து தற்கொலை செய்துகொண்ட இரண்டு பெண்களின் வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு வருகிறது. மேலும் ராஜா மீது புகார் கொடுத்த பெண்ணுக்குச் சிலர் கொலை மிரட்டல் விட, அது குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சன் டி.வி.யின் செய்தி ஆசிரியர் ராஜாவை போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியானதும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தாமாகவே போன் செய்து போலீஸாருக்கு ஏராளமான தகவல்களைக் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,‘‘நீண்ட நாட்களாக அவர் அந்த நிறுவனத்தில் பணி புரிவதால், செல்வாக்கோடு இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் செய்தி வாசிக்கும் பெண்களுக்கான செட்யூல் போடும் பணியை ஜோதிஸ்வரன் என்பவர் செய்து வந்துள்ளார். அவரை அவர்களின் இன்னொரு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு அனுப்பியுள்ளனர். அதையடுத்து அந்தப் பணியையும் ராஜாவே சேர்த்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியுள்ளார். அதன் பின்னர்தான் பெண்களிடம் அவர் கைவரிசையை அதிமாகக் காட்டியிருக்கிறார். இதற்காக அவர் தனக்குக் கீழே உள்ள நம்பிக்கையான இரண்டு பேரை தேர்வு செய்துள்ளார்.
அதில் ஒருவர்தான் வெற்றிவேந்தன். அவர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களிடம் பக்குவமாகப் பேசி சம்மதிக்க வைப்பதில் கில்லாடியாம். அவரால் முடியாத நிலையில், அவர்களுக்கு ட்யூட்டி நேரத்தை மாற்றிக் கொடுப்பாராம். அப்போதும் பணியவில்லை என்றால், டி.வி.யில் வரவிடாமல் செய்துவிடுவார்களாம். அவர்களிடம், ‘செய்தி வாசிக்கும்போது உங்கள் முகபாவம் சரியில்லை. எப்படி செய்தி வாசிக்க வேண்டும் என்று என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று மன்மத ராஜாவிடம் அனுப்பி வைப்பாராம். 
டி.வி.யில் இரண்டொரு நாட்கள் வந்துவிட்டு, மீண்டும் வர முடியாமல் போவதால் பல பெண்கள் இவர்கள் வலையில் விழுந்துவிடுவார்கள். அப்படியும் சிலர் முரண்டு பிடித்தால், செய்தி வாசிக்கச் சொல்லிக் கொடுப்பது போல, முகத்தைத் தொடுவது, கன்னத்தைக் கிள்ளுவது என்று சின்னச் சின்ன சிலுமிஷங்களைச் செய்வாராம். பின்னர் தனிமையில் சந்திக்கலாம் என்று நூல் விடுவார். அதில் அவர்கள் விழுந்துவிட்டால் மீண்டும் டி.வி.யில் வரமுடியுமாம். அப்போதும் சம்மதிக்கவில்லை என்றால், அனைவர் முன்னிலையிலும் கேவலமாகத் திட்டுவது. அழ வைப்பது என பாடாய்ப் படுத்துவாராம். இதையெல்லாம் தாங்கிக் கொண்டால் வெளியூருக்கு மாறுதல் செய்வாராம். இதனால் அதிர்ச்சி அடைந்து ஒன்று ராஜாவோடு இணக்கமாகிவிடுவார்கள். அல்லது வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு ஓடிவிடுவார்கள். 
ராஜாவோடு நெருக்கமாக இருந்த ஒரு பெண் அடிக்கடி கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு, அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார். இன்னொரு பெண்ணை இரவு நேரத்தில் வெளியே அழைத்துச் சென்றுவிட்டு, அந்தப் பெண்ணின் வீட்டருகே காரில் இறக்கி விட்டபோது அந்தப் பெண்ணின் கணவர் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். மேலும், அருகில் இருந்த உறவினர்கள் உதவியுடன் ராஜாவை அங்கேயே சிறைப் பிடித்தும் வைத்துள்ளார். இதை அறிந்த சன் டி.வி. ஊழியர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி ராஜாவை மீட்டுச் சென்றுள்ளனர்.கடைசியாக பிரபல ஐ.பி.எஸ். அதிகாரியின் பெயரைக் கொண்ட ஒரு பெண் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சங்கீதா, தேன்மொழி ஆகியோர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரண்டு தற்கொலைகளுக்கும் ராஜாவின் தொந்தரவுதான் காரணம் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அப்போது தி.மு.க. ஆட்சி நடந்ததால், சங்கீதாவின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். சங்கீதா லெஸ்பியன் என்று சொல்ல வைத்து கேஸை முடித்துள்ளனர். சங்கீதா, தேன்மொழியின் பெற்றோர்கள் புகார் கொடுக்கத் தயாராகி வருகிறார்கள். அவர்கள் புகார் கொடுத்தால் தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், ராஜா மீது புகார் கொடுத்துள்ள அகிலாவிற்கு, கடந்த 21_ம் தேதி இரவு 11.45 மணிக்கு போன் செய்து, சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அமைந்தகரை போலீஸில் அகிலா புகார் கொடுத்திருக்கிறார்.
ராஜாவிற்கு ஆதரவாக இருந்த அவரது உதவியாளர் வெற்றிவேந்தன் தலைமறைவான நிலையில் இவரைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர் சிக்கினால் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.’’ என்றார் அந்த அதிகாரி.பிரதமரின் கீழ் ‘தேசிய ஒருமைப்பாட்டுக் குழு’ என்ற ஒரு சுதந்திரமான அமைப்பு உள்ளது. இதில் அனைத்து மாநிலம் மற்றும் துறைகளைச் சேர்ந்த நபர்களும் மதத் தலைவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் இந்தியா முழுவதும் விமானம், ரயிலில் இலவசமாகச் சென்று வரலாம். பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திலும் கலந்து கொள்ளலாம். இந்தக் குழுவில் தென்னிந்தியாவில் இருந்து ராஜா உறுப்பினராக உள்ளார். பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தில் கைதாகி இருக்கும் ராஜாவை இந்தப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. 
நமது நிருபர்கள் 
நன்றி குமுதம் ரிப்போர்டர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக