வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சென்னை IPL டிக்கெட் விற்பனை அமோகம் ரசிகர்கள் அலைமோதுகிறார்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 6வது சீசன், நேற்று தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் 9 அணிகள் களமிறங்குகின்றன. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் லீக் ஆட்டங்கள் (8), சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. வரும் 13ம் தேதி இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது.
இந்த போட்டிக்கான டிக்கெட் இன்று காலை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுன்டர்களில் விற்பனை செய்யப்பட்டது. டிக்கெட்டுகளை பெறுவதற்காக ரசிகர்கள் காலையிலேயே வந்தனர். அவர்களை ஒழுங்குபடுத்த போலீசாரும் நிறுத்தப்பட்டனர். பெரிய அளவில் ரசிகர்கள் திரண்டு வராததால், டிக்கெட் விற்பனை சீராகவே காணப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.750. அடுத்து ரூ.1000, ரூ.1,200, ரூ.1,400 முதல் ரூ.20 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. 750 ரூபாய் டிக்கெட்டுகளை பெறுவதற்காகவே ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக