சனி, 13 ஏப்ரல், 2013

பெண் தீக்குளிப்பு எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில்


எம்.ஜி.ஆர். நகர் சூளைப் பள்ளம் அவ்வை தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன், இவரது மனைவி சுனிதா(29).வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிவந்த இவர்  கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மாயமானார்.
இது தொடர்பாக அவரது தாய் மேரியம்மாள் கடந்த 5-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்,சேகர் என்ற கிறிஸ்தவ போதகருடன் எனது மகள் சுனிதா சென்று விட்டாள்.எனவே அவளை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தார்.இந்த புகார் மனு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில்  சுனிதாவுக்கும், கிறிஸ்தவ போதகர் சேகருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும்,அவருடன் சுனிதா சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து இன்று காலையில் சேகர் போலீசில் சிக்கினார்.அவரிடம் நடத்திய விசாரணையில் புழுதிவாக்கத்தில் சுனிதா இருப்பதாக கூறினார்.இதைத்தொடர்ந்து போலீசார் சுனிதாவை எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். இந்நிலையில் கழிவறைக்கு சென்ற சுனிதா திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.  போலீசின் இந்த தகவல் பெரும் சந்தேகத்தை அளிப்பதாக உள்ளது . காவல் நிலையத்தில் எப்படி இது சாத்தியமாகும்?  சிபிஅய் விசாரிக்க வேண்டும் அவரது அலறல் சத்தத்தை கேட்டு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் சுனிதாவை காப்பாற்ற முயன்றார். அதற்குள் சுனிதா கருகி கீழே விழுந்தார். உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சுனிதாவிடம் பெண் நீதிபதி சாந்தி விசாரணை நடத்தி வருகிறா http://dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக