வியாழன், 4 ஏப்ரல், 2013

மொட்டை ரவி, முட்டை ரவி, கட்டை ரவி, மூக்கு ரவி, பல்லு ரவி, குண்டு ரவி, குள்ள ரவி, டாக் ரவி, ஸ்டீல் ரவி, மாடு ரவி

ரவி! இந்த பெயரில் நிறைய பேர் இருப்பார்கள். இது ஊரறிந்த விஷயம். ஆனால், வடசென்னை பகுதியில் இதே பெயரில் சுமார் 20 ரவடிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
கதிரவன் கொலை வழக்கில் சிக்கிய காதுகுத்து ரவி, மோசடி வழக்கில் சிக்கிய ஜெர்மன் ரவி போன்றவர்களின் வரிசையில், மொட்டை ரவி, முட்டை ரவி, கட்டை ரவி, மூக்கு ரவி, பல்லு ரவி, குண்டு ரவி, குள்ள ரவி, டாக் ரவி, ஸ்டீல் ரவி, மாடு ரவி, பவுடர் ரவி, ஸ்கெட்ச் ரவி, பொருள் ரவி, மாட்டான் குப்பம் ரவி, பல்லக்கு ரவி, தோப்பு ரவி என ரவுடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இவர்கள் செய்யும் குற்றச்செயல்கள் மற்றும் உடல் அமைப்புகளை வைத்து போலீஸ் வட்டாரத்தில் இதுபோன்ற அடைமொழியுடன் அழைக்கிறார்கள். மூக்கு ரவிக்கு நீளமான மூக்கு இருக்கும். பல்லு ரவிக்கு லேசாக பல் உயர்ந்து காணப்படும். டாக் ரவி, நாய்களை விற்பனை செய்பவர், ஸ்கெட்ச் ரவி, குற்றச்செயல்களுக்கு கச்சிதமாக பிளான் போட்டு கொடுப்பார்.
குண்டு ரவி சற்று தடிமனான தோற்றத்திலும், குள்ள ரவி உயரம் குறைவாகவும் காட்சியளிப்பார்கள். பொருள் ரவி ரவுடிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதில் கைதேர்ந்தவன். (சென்னை பாஷையில் ரவுடிகள் வட்டாரத்தில் பொருள் என்பது ஆயுதத்தை குறிக்கும்)
இதேபோல, வெள்ளை ரவி செக்கச்செவேல் என இருப்பதால் வெள்ளை ரவி என அழைக்கப்பட்டுள்ளான். ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் குட்டிகளை விற்பனை செய்து வந்ததால் ஜெர்மன் ரவிக்கு அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்படி ரவுடிகள் ராஜ்யத்தில் பெருகி வரும் ரவி என்ற பெயரால் நல்ல ரவிகளையும் போலீசார் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்காமல் இருந்தால் சரிதான். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக