திங்கள், 1 ஏப்ரல், 2013

டெல்லியில் ஓடும் காரில் மாணவி பாலியல் பலாத்காரம்

புதுடெல்லி: டெல்லியில் பள்ளி மாணவி ஒருவர் காரில் கடத்திச்
செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய்டாவில் எழுது பொருள் வாங்க கடைக்கு சென்ற மாணவியை பின் தொடர்ந்த சென்ற மர்ம நபர் மயக்க மருந்து அடித்து காரில் கடத்திச் சென்றார். பின்னர் ஓடும் காரிலேயே அந்த மர்ம நபர் மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான். சுய நினைவை இழந்து கிடந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவியை பலாத்காரம் செய்த அந்த மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதே போல் டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தது. ஷாப்பிங் மஹாலில் வேலை செய்யும் அந்த பெண், அலுவலக காரில் வீடு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றிய பிறகும் டெல்லியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பெண்கள் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக