செவ்வாய், 9 ஏப்ரல், 2013

காதல் தோல்வியால் துவண்டிருந்த ஆண்ட்ரியா காதலுக்கு ரெட் கார்ட்

ஆண்ட்ரியாவை நான் காதலிக்கிறேன்’ என்று பிரபல மலையாள இயக்குநரின்
மகனும், குறிப்பிடத்தகுந்த நடிகருமான ஃபஹத் ஃபாசில் அறிவித்தாலும் அறிவித்தார், கேரள திரையுலகமே ரணகளமானது. ஆனால், தமிழ்த் திரையுலகம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் ஆண்ட்ரியாவின் பல காதல்களைப் பார்த்து சலித்து விட்டதுதான். ஒரு வாரம் மவுனமாக இருந்த ஆண்ட்ரியா, பிறகு திருவாய் மலர்ந்தார். ‘என்னை காதலிப்பது அவரது விருப்பம். அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. பட், நான் அவரை காதலிக்கவில்லை’ என ஆசிட் ஊற்றியிருக்கிறார். இருவருக்கும் இடையில் என்னதான் நடந்தது? ‘அன்னையும் ரசூலும்’ மலையாளப் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அப்போது தொடர் காதல் தோல்வியால் துவண்டிருந்த ஆண்ட்ரியா, உடன் நடித்த ஃபஹத்திடம் நட்பாகப் பழகியிருக்கிறார்.


ஒரு கட்டத்தில் தனிப்பட்ட துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது. படப்பிடிப்பு நேரத்தில் அருகருகே அமர்ந்து உரையாடியிருக்கிறார்கள். அப்போது, தன் காதல் தோல்விகள் குறித்து ஆண்ட்ரியா பகிர, ஃபஹத் ஆறுதல் சொல்ல, ஆயிரம் வாட்ஸ் காதல் பல்ப் எரிய ஆரம்பித்திருக்கிறது. ஒருநாள் தன் விருப்பத்தை ஃபஹத் தெரியப்படுத்தியிருக்கிறார். ‘யோசித்து சொல்கிறேன்’ என்று ஆண்ட்ரியா பதில் அளித்திருக்கிறார். சாதகமான பதில் கிடைக்கும் வரை காத்திருக்க பொறுமை இல்லாத ஃபஹத், மீடியாவை அழைத்து தன் காதலை அறிவித்துவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண்ட்ரியா, கடுப்பாகி அவசர காதலுக்கு ரெட் கார்ட் போட்டுவிட்டார் என்கிறார் புரொடக்ஷன் புண்ணியகோடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக