வெள்ளி, 12 ஏப்ரல், 2013

அஞ்சலி: டேய்… கேஸை வாபஸ் வாங்குறா

வீரப்பனுக்கு பிறகு இரு மாநில போலீசார் தேடுகிற ஒரே வி.ஐ.பி அஞ்சலிதான் போலிருக்கிறது. இந்த தேடுதல் வேட்டையில் சித்தியில் ஆரம்பித்து நடிகர் ஜெய் வரைக்கும் அஞ்சலிக்கு தெரிந்த அத்தனை பேரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்த போலீஸ், குணா கமல், அபிராமியை தேடியலைகிற மாதிரி அலைந்து கொண்டிருக்கிறது.
பிரபல பத்திரிகை ஒன்று, ‘அஞ்சலி வரலாறு’ என்று தொடர் கட்டுரை போட தொடங்கியிருக்கிறது.
ஆனால் அஞ்சலியோ தனது ஒரே செல்போனிலிருந்து ஆங்காங்கே சிலரிடம் பேசி “ஐ ஆம் சேஃப்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
“தங்கச்சிய காணலைங்க” என்று போலீசில் புகார் கொடுத்திருக்கும் அவரது அண்ணனுக்கு நேற்று வந்த செல்போன் அழைப்பில் பேசியது அஞ்சலியேதான். “டேய்… கேஸை வாபஸ் வாங்குறா” என்று அவர் பேசியதை அப்படியே ஒலிபரப்பி உஷார் நிலையிலிருந்த தீயணைப்பு வண்டிகளை சற்றே ஆசுவாசப்படுத்தின ஆந்திர சேனல்கள்.

ஆந்திரா சேனல்கள் சுவாரசியமாக ஒலிபரப்பு செய்யும்படி,  அப்படி என்னதான் பேசினார் அஞ்சலி?
“நான் நல்லா இருக்கேன். எனக்கு ஒன்றும் பயம் இல்லை. என்னோட ஒருத்தர் இருக்கிறார். என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதுசரி… நீ ஏண்டா என்னை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தே? உடனே அந்த புகாரை வாபஸ் வாங்கு. நான் நல்லாத்தான் இருக்கிறேன். பத்திரமாகவும் இருக்கிறேன். நீ புகார் கொடுத்ததால எனக்கு பிரச்சினை ஆயிடுச்சு” என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு அண்ணன், “அது முடியாது. உன்னை தேடிக் கண்டு பிடிக்க முயற்சி செய்து வருவதாகவும், உன்னை நேரில் பார்க்கும் வரை புகாரை வாபஸ் பெற முடியாது என்றும் போலீசார் என்னிடம் கூறி விட்டனர்” என்றிருக்கிறார்.
அதற்கு அஞ்சலி, “என்னை காணவில்லை என்று கொடுத்த புகாரை மட்டும் வாபஸ் வாங்குடா.. அந்த ராட்சசி (சித்தி பாரதிதேவி) மீதும் அந்த ஆளு (சித்தப்பா சூரிபாபு) மீதும் கொடுத்த புகாரை வாபஸ் வாங்காதடா” என்று கூறியது, ஆந்திர சேனல்களில் ஒலிபரப்பாகியது.
என்னங்க நம்ம போலீஸ்? தேட வேண்டியவங்களை விட்டுர்ராங்க..  தேடுவதை நிறுத்த புகாரை வாபஸ் வாங்க விரும்பினா விட மாட்டேங்கிறாங்க
/viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக