வியாழன், 4 ஏப்ரல், 2013

பஸ் டிக்கெட் மிஷின்கள்.. துவக்கப்பட்ட அன்றே நிறுவனத்துக்கு டென்டர் தந்தது ஏன்?

சென்னை: பஸ் டிக்கெட் வழங்கும் மிஷின் விவகாரம் தொடர்பாக முதல்வர்
ஜெயலலிதாவோ, போக்குவரத்துத் துறை அமைச்சரோ விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:போக்குவரத்துத் துறையின் சார்பில் பஸ்களில் டிக்கெட் வழங்குவதற்கான எலக்ட்ரானிக் மெஷின்களைத் தயாரிப்பதற்காக ரூ.200 கோடிக்கான பணி ஒரு நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு இயந்திரம் தயாரிப்புக்கான எந்த அனுபவமும் இல்லை. டெண்டர் கோரப்பட்ட அன்றுதான் அந்த நிறுவனமே தொடங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.அரசு துறை பற்றிய இந்தக் குற்றச்சாட்டில் உள்ள உண்மை என்ன என்பதைப் பற்றி அரசின் சார்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பேரவையில் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் ஸ்டாலினுக்குப் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக 4 நாள்களுக்குப் பிறகு அமைச்சர் பதில் அளிக்கிறார் என்றால் பொதுமக்கள் சந்தேகம் கொள்வார்கள் அல்லவா இந்த புகார் தொடர்பாக திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் பிரச்னை எழுப்பப்பட்டுள்ள நிலையில், பொறுப்புள்ள அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.

அதைவிட்டு கேள்வி எழுப்பியவர்களைப் பார்த்து அவர்களுக்குத் தகுதி இல்லை என்று கூறுவதா?இன்ஜெனரி டெக்னாலஜீஸ் சொல்யூஷன்ஸ் என்ற கம்பெனிக்கு டெண்டர் தரப்பட்டதை அமைச்சர் ஒப்புக்கொள்கிறார். அப்படியென்றால் அந்தக் கம்பெனி என்று தொடங்கப்பட்டது டெண்டர் நிபந்தனையாக 3 ஆண்டுகள் அனுபவம் வேண்டும் என்று சொல்வது ஏன் புறக்கணிக்கப்பட்டது இந்த நிறுவனத்துக்காக அரசின் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது ஏன் என்பது தொடர்பாக முதல்வரோ, போக்குவரத்துத் துறை அமைச்சரோ பதில் அளிப்பார்களா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக