சனி, 13 ஏப்ரல், 2013

பிரதமரை காப்பாற்ற சி.பி.ஐ., அறிக்கை திருத்தம் ? இன்னொரு ராசா கிடைக்கலையாம்

புதுடில்லி: ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., தயாரித்த விவர அறிக்கை திருத்தப்பட்டதாக மத்திய அரசு மீது தற்போது ஒரு புகார் எழுந்திருக்கிறது.
தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தகுதி இல்லாத நிறுவனங்கள் இதனை பெற்றுள்ளதாகவும், இதனால் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து பார்லி.,யில் பெரும் அமளி கிளம்பியதை அடுத்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் சி.பி.ஐ.,விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவர அறிக்கையினை மத்திய சட்ட அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் தலையிட்டு திருத்தியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், சி.பிஐ.,இயக்குனர் ரஞ்சித்சின்காவை அழைத்து பேசியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.




சி.பி.ஐ.,யில் தலையீடு :

இது குறித்து பா.ஜ., தலைவர்கள் சுஷ்மாசுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் சி.பி.ஐ.,தயாரித்த உண்மையான அறிக்கை வெளியிடப்பட வேண்டும். பிரதமர் அலுவலகம் சி.பி.ஐ., விவகாரங்கில் தலையிடுகிறது என்பதற்கு இதுவே சான்றாகும். மேலும் சட்ட அமைச்சரின் சந்திப்பு பிரதமரை காப்பாற்றவே மத்திய அரசு இவ்வாறு களம் இறங்கியிருக்கிறது. எனவே சி.பி.ஐ., அல்லாத சிறப்பு புலனாய்வு படையினர் நிலக்கரி சுரங்கம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக