செவ்வாய், 2 ஏப்ரல், 2013

நடிகர் லாரன்ஸ்: திருப்பதி கோவிலில் பெண்களை கண்ட இடங்களில் கையை வைத்து தள்ளிவிடுகிறார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் லாரன்ஸ்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:– எனது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டேன். தாயார் பூரண குணமடைந்ததும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் திருப்பதி வந்தோம். சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த எனது தாயாரை கோவில் ஊழியர் ஒருவர் பிடித்து தள்ளி விட்டார். நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்து விட்டார்.சாமி தரிசனத்தின்போது, பிடித்து தள்ளி விடுவது சரியான மரியாதை அல்ல. இது, கொடூரமான செயல். இது, எனது குடும்பத்தை அவமானப்படுத்துவதுபோல் உள்ளது. இதனால், ஆவேசமாக பேசி விட்டேன். சாமி தரிசனம் செய்ததில் திருப்தி இல்லை. பெண்களை மரியாதையாக போங்க என்று சொல்லலாம். ஏய் போ என்று கண்ட இடங்களில் கையை வைத்து தள்ளிவிடுகிறார்கள். திருப்பதிக்கு எப்போது வந்தாலும் ஊழியர்களின் நடவடிக்கை வேதனை அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக