திங்கள், 8 ஏப்ரல், 2013

ஓடிவர மறுத்த காதலியை துடிதுடிக்க அறுத்து கொன்ற காதலன்!

 காணச்சகிக்காத கோர படங்கள் நக்கீரனில் வெளியாகி உள்ளது பார்க்க விரும்புபவர்கள்  இங்கே தேடவும்   nakkheeran.in/Users/frmNews.aspx?N=96429

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் சாம்ராஜ் (23). இதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்கிற அம்புலி. இவரது மகள் சந்தியா (23). இவர்கள் இரண்டுபேரும் அரியர் தேர்வு எழுத தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு வந்துள்ளனர். 
தேர்வு முடிந்ததும் சந்தியா தர்மபுரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பென்னாகரம் வழியாக மேட்டூர் செல்லும் பஸ்சின் பின்பக்க சீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்போது பகல் 12.15 மணியளவில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாம்ராஜ், ஆட்டை அறுப்பது போல் சந்தியாவின் கழுத்தை அறுத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத சந்தியா அலறிதுடித்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத சாம்ராஜ் விடாமல் அறுத்தார். அப்போது உயிர் பிழைக்க பஸ்சில் இருந்து வெளியே ஓடிவந்த சந்தியா பஸ் படியிலேயே துடிதுடித்து இறந்தார்.


பின்னர் தகவல் அறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்து கத்தியுடன் நின்று கொண்டு இருந்த சாம்ராஜை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தன் காதலை மறந்து தன்னுடன் வீட்டை விட்டு ஓடிவர மறுத்த  சந்தியாவை துடிதுடிக்க ஆட்டை அறுப்பது போன்று அறுத்து கொன்றதாக சாம்ராஜ் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளான். இந்த சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: படங்கள்: வடிவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக