வியாழன், 4 ஏப்ரல், 2013

வருகிறார் இன்னொரு கன்னடத்து பைங்கிளி

‘வாரணம் ஆயிரம்‘, ‘குத்து போன்ற படங்களில் நடித்த திவ்யாவை தொடர்ந்து
கன்னடத்திலிருந்து தமிழுக்கு வருகிறார் ஆஷிதா. இவர் நடிக்கும் படம் ‘இசக்கி. இப்படம் பற்றி இயக்குனர் எம்.கணேசன் கூறியதாவது:பள்ளி ஆசிரியையான ஆஷிதாவை வளைத்துப்போட ஹீரோ சரண்குமார் அவர் பின்னாலேயே சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் ஆஷிதா எச்சரித்தும் பின்னால் சுற்றுவதை நிறுத்தவில்லை. கோபம் அடையும் ஆஷிதா அவரை செருப்பால் அடித்துவிடுகிறார். இதற்கிடையில் வில்லனிடம் பிரச்னை ஏற்படுகிறது. இதன் விளைவாக ஹீரோ, வில்லன் இருவருமே ஆஷிதாவை துரத்துகின்றனர். இதன் முடிவு என்ன என்பதே கிளைமாக்ஸ். ஆஷிதா, சரண்குமாருடன் ‘பசங்க‘ சிவா, சித்ரா லட்சுமணன், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். ஸ்ரேயா கோஷல் குரலில் ஒரு பாடலை பதிவு செய்ய இசை அமைப்பாளர் 4 மாதம் காத்திருந்தார். சங்கர்மகாதேவன், கார்த்திக் போன்றவர்களும் பாடி உள்ளனர். சசிகுமார் ஒளிப்பதிவு. மெட்மீடியா தயாரிப்பு.மதுரை, காரைக்குடி, சென்னை, ஊட்டி, திண்டுக்கல்லில் ஷூட்டிங் நடந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக