ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

செல்வராகவனும் தனுஷும் மீண்டும் படம் பண்ணுகிறார்கள் , எங்கே இருந்து காப்பியோ ?

செல்வராகவனும் தனுஷும் புதுபேட்டை படத்திற்கு பின்பு இப்போது மீண்டும் ஒன்று சேர்கிறார்கள் 
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்க மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘இரண்டாம் உலகம்’ திரைப்படம். செல்வராகவன் இயக்கத்தில் வெற்றிபெற்ற ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் உலகம் திரைப்படம் இருக்கும் என்று பேசப்படுகிறது.ஆயிரத்தில் ஒருவன் திரைப்படதின் கதையை செல்வராகவன் தயார் செய்ததும், அவரது தம்பியான தனுஷ் இந்தக் கதையில் நான் நடிக்கிறேன் எனக் கேட்டதற்கு, செல்வராகவன் வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு பாடல் மட்டும் பாடினார்.

அதேபோல் இரண்டாம் உலகம் திரைப்படத்திலும் தனுஷ் ஒரு பாடல் பாடவிருக்கிறாராம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆர்யா நடனமாடும் ஒரு பார்ட்டி பாடலை தனுஷ் பாடுகிறாராம். இரண்டாம் உலகம் திரைப்படத்தில் நடிப்பதாகவும் தனுஷ் கேட்டதாக ஒரு செய்தி பரவினாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லாததால் அது வதந்தியாகவே கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக