வியாழன், 11 ஏப்ரல், 2013

புலி ஆதரவாளர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதால் இலங்கையில் தடை

“தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை இலங்கையில் தடை செய்துவிட்டு கேரளாவில் தயாரிக்கப்படும் மலையாள திரைப்படங்களை திரையிட வேண்டும்” இவ்வாறு புத்த துறவிகள் அமைப்பு, இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது
. ‘ராவணா சக்தி’ என்ற பெயருடைய இந்த புத்த துறவிகள் அமைப்பின் செயலாளர் இத்தாகந்த சத்தாதிஸ்ஸ தேரர், இது தொடர்பாக இலங்கை தேசிய திரைப்பட கார்ப்பரேஷனுடன் பேசியுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இந்த துறவி, “விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் நடிக்கும் தமிழக திரைப்படங்களை தடை செய்துவிட்டு மலையாள படங்களை இலங்கையில் திரையிட்டால், அதனால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படாது” என்றும் தெரிவித்துள்ளார். (பிட்டு படம் இல்லைத்தானே.. துறவி?)
புத்த துறவிகள் அமைப்பு இந்த ரூட்டில் செல்ல, தமிழக திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்த போவதாக, தெரிவித்துள்ளார் பிரபல சிங்கள திரைப்பட நடிகை.
மாலினி பொன்சேகா என்ற இந்த பேரிளம் நடிகை, இலங்கையில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பைலட் பிரேம்நாத் என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
நாளை வியாழக்கிழமை தமிழக நட்சத்திரங்களுக்கு எதிரான இந்த போராட்டத்தை நடத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார். viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக