புதன், 3 ஏப்ரல், 2013

தேசியவிருது’அல்ல! அவமானப்படுத்தும் முயற்சி! - பாலா


பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படம் தமிழ்த்திரையுலக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கதை, படமாக்கப்பட்ட விதம், நடிகர், நடிகைகளின் நடிப்பு என பல வகைகளில்  பரதேசி திரைப்படம் ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றது ரசிகர்களின் விருப்பத்திற்கும் விமர்சனத்திற்குமுட்பட்ட படமாக மாறியது பரதேசி. திரைப்படத்தின் கதை ‘எரியும் தணல்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என ஒப்புக்கொண்ட பாலா, திரைப்படத்தில் கதை - பாலா என குறிப்பிட்டது ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளானது.
மேலும் பரதேசி திரைப்படத்திற்கு உடை வடிவமைத்த பூர்ணிமாவுக்கு சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்ணிமா ராமசாமி ஒரு முக்கிய கட்சி தலைவரின் உறவினர் என்பதால் தான் தேசிய விருது வழங்கப்பட்டது என்ற செய்தி பரவி வரும் நிலையில் இயக்குனர் பாலா “ விருது கிடைக்காவிட்டாலும் நாங்கள் வருத்தப்பட்டிருக்கமாட்டோம். ஆனால் பெயருக்காக இந்த விருதைக் கொடுத்தது அவமானப்படுத்துவது போல் இருக்கிறது” என்று கூறியதாக தெரிகிறது.cinema.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக