திங்கள், 1 ஏப்ரல், 2013

உலகில் வெற்றி பெற ஆங்கிலம் படிப்பது அவசியம்

திருச்சூர்:""இன்றைய நவீன உலகில், வெற்றி பெற வேண்டுமானால்,
கேரள மாநிலம், திருச்சூரில் நடந்த, சர்வதேச கருத்தரங்கில், கேரளாவைச் சேர்ந்தவரும், மத்திய மனிதவளத் துறை இணை அமைச்சருமான, சசி தரூர் பேசியதாவது:
அவசியம்:உலகம் மிகவும் மாறி விட்டது. பல புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, நம்மை தயார் படுத்த வேண்டியது அவசியம். இன்றைய நவீன உலகில், வெற்றி பெற வேண்டுமெனில், ஆங்கிலம் படிப்பது மிகவும் அவசியம்.நம் குழந்தைகளுக்கு, கட்டாயமாக ஆங்கிலம் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க மறுத்தால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அதற்கு, நாமே காரணமாக இருந்து விடக் கூடாது.

கேரளாவைச் சேர்ந்தவர்கள், மலையாளத்துக்கு முன்னுரிமை கொடுத்தாலும், ஆங்கிலத்தை தவிர்க்க கூடாது. ஆங்கிலம் கற்பது, பொருளாதார, சமுதாய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கேரளாவில், போதிய வேலை வாய்ப்புகள் இல்லை.
வெற்றி பெற்றேன்:இதனால் கேரள மக்கள், உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் வேலை தேடிச் செல்கின்றனர். தமிழர்கள், பீகாரைச் சேர்ந்தவர்களை விட, நமக்கு, ஆங்கிலம் மிகவும் முக்கியம்.கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டேன். தேர்தல் பிரசாரம் முழுவதும், ஆங்கிலத்தில் தான் பேசினேன். இதனால், எனக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை எழுப்பினர். ஆனாலும், அந்த தேர்தலில் வெற்றி பெற்றேன்.இவ்வாறு, சசி தரூர் பேசினார்.
ஆங்கிலம் படிப்பது மிகவும் அவசியம். இளம் தலைமுறைக்கு, ஆங்கிலம் கற்றுக் கொடுக்கவில்லை என்றால், அவர்களின் எதிர்காலம், பாதிக்கப்படும், '' என, மத்திய மனிதவளத் துறை இணை அமைச்சர், சசி தரூர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக