வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சிபிஐ செயல்பாட்டில் அமைச்சரின் தலையீடு... சட்ட அமைச்சர், பிரதமர் பதவி விலக கோரி BJP

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில். நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு, சிபிஐ இயக்குனர் சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை சந்தித்து ஏன் என்று பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது. சட்ட அமைச்சரிடம் காட்டிய பிறகே அறிக்கையை சிபிஐ இயக்குனர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும் பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத். சிபிஐ செயல்பாட்டில் சட்ட அமைச்சரின் தலையீடு இருந்ததாக குற்றம்சாட்டினார். சிபிஐ தலையிட்ட சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த பிரச்சனைக்கு தார்மீக பொறுப்பு ஏற்று பிரதமரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக