புதன், 3 ஏப்ரல், 2013

பிரிட்டனில் இலங்கையரின் பெட்ரோல் பங்க் ATM எந்திரத்தை குண்டுவைத்து தகர்த்து கொள்ளை

Petrol stationவடக்கு இங்கிலாந்தின் ஹேம்ஷைர் மாகாணம், வேஹில் என்னுமிடத்தில் இலங்கையை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்த பங்கில் ஏ.டி.எம். ஒன்றும் செயல்பட்டு வருகிறது. கடந்த ஞாயிறன்று அதிகாலை 4 மணிக்கு இந்த ஏ.டி.எம். எந்திரம் குண்டுவைத்து தகர்ப்பட்டது. பின்னர் அந்த ஏ.டி.எம்-மில் இருந்த பணத்தை மூன்றுபேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த காட்சிகள் அங்கிருந்த ரகசியக் கேமிராவில் பதிவாகியிருந்தது. அப்பகுதியின் அருகில் கேஸ் சிலிண்டர்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குண்டுவெடித்த போது பெரும் சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்துள்ளனர். இதேபோன்று, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த கொள்ளை முயற்சியில் 2 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக