செவ்வாய், 2 ஏப்ரல், 2013

Anil, Mukesh அம்பானி சகோதரர்கள் இணைந்து 1,200 கோடிக்கு ஒப்பந்தம்

அம்பானி சகோதரர்களில், மூத்தவரான முகேஷ் அம்பானி, தனது 4 ஜி
தொலைத்தொடர்பு வெளியீட்டிற்காக, இளைய சகோதரர் அனில் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸின், கண்ணாடி இழை வலைத்தள இணைப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் விதத்தில், ரூ. 1,200 கோடிக்கு ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார்.முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம், அனிலின் ரிலையன்ஸ் டெலிகம்யூ னிகேஷன் நிறுவனத்தின் 120000 கி.மீ நீள இணைப்புகளை தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். இதற்கு மாறாக, பின்னாளில் ஜியோ இன்போகாம் நிறுவும் இணைப்புகளை அனிலின் நிறுவனம் உபயோகப் படுத்திக்கொள்ளும்.இந்த ஏற்பாடு உடனடியாக இணைந்து செயல்படுவதற்கும், புதிய இணைப்புகளை தடையில்லாமல் தருவதற்கும் வழிகோலும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத்துறை குறித்த அனைத்து விஷயங்களிலும், இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட எடுத்த முதல் முடிவு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக