ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

தவறான அரசியலின் முதல் பலி அமரர் Alfred.T.Duraiappah

துரையப்பாவின் செல்வாக்கை கண்டு பயந்த தமிழ்அரசியல்வாதிகள் 

இலங்கை தமிழர்களின்  அரசியலை பேசும் யாரும்  அமரர் Alfred Duraiyappah
அவர்களின்  வரலாற்றை  கவனிக்காமல் அரசியல்  பேசவே முடியாது
.
மக்களை உசுப்பேத்தி விட்டு அதில் குளிர்காய்ந்த  இனவாதிகளான தமிழ் அரசியல்வாதிககளுக்கு  மத்தியில் மக்களின் நல்வாழ்வை முதன்மை படுத்தி  மக்களுக்கு உருப்படியான சேவை செய்ததன் மூலம் ஒரு புதிய அரசியல் அத்தியாத்தை அவர் தமிழ் பகுதிகளில் ஆரம்பித்து வைத்தார் அன்றைய தமிழ் தேசிய பேசிய அரசியல்வாதிகளின் செல்வாக்கை யாழ்பாண தொகுதியில் உடைத்து எறிந்த  சுயேட்சை அரசியல்வாதியான அமரர்  அல்பிரெட் துரையப்பாவின் மக்கள் சக்தியையை கண்டு பயந்த அந்த அரசியல்வாதிகள்  அவரை  பற்றி படுகேவலமான  பொய்பிரசாரங்களை  கட்டவிழ்த்து விட்டது ஆனாலும் மக்கள் செல்வாக்கு அல்பிக்கு வளர்ந்து கொண்டே வந்தது. அவர் ஏனைய அரசியல்வாதிகள் போன்று மக்களுக்கு பொய்யான வாக்குறிதிகளை ஒருபோது வழங்காதவர்
சமுகத்தின் சகல தட்டு மக்களாலும் எப்போதும் அணுகக்கூடிய ஒரு மக்கள் தொண்டனாக அவர் இருந்தார் மேனா மினுக்கி தமிழ் கட்சிகளுக்கு அல்பியின் வளர்ச்சி வயிற்றில் புளியை கரைத்தது . பிற்காலத்தில் புலிகள் எப்படி யாரையும் கொல்வதற்கு முன்பாக அவரைபற்றி; படுமோசமான வதந்திகளை அவிட்டு விடுமோ அதே பாணியில் அல்பியை பற்றியும்; கணக்கில் அடங்காத கட்டு கதைகளை உலாவவிட்டு பிரபாகரன் போன்ற அன்றைய விடலைகளை தூண்டி விட்டு காரியத்தை சாதித்து கொண்டார்கள் அமரர் அல்பிரேட் துரையப்பாவை நான்தான் கொன்றேன் என்று பகிரங்கமாக பிரகடன படுத்திய ஒருவரை தண்டிபதற்கு பதிலாக தலைவர் என்று தலைமேல் வைத்து கொண்டாடி அதன் வினையையும் பிற்காலத்தில் முழு தமிழினமும் பெற்று கொண்டது.
  தமிழ் கட்சிகள் அன்று  எதை  செய்தார்களோ  அதையே பின்பு அவர்களும் பெற்றுக்கொண்டது  வரலாற்றில் நடைபெற்றது
அன்று யாழ் மேயர்  Alfred Duraiyappa வின்  கொலையில் ஆரம்பித்த  கிரிமினல் அரசியலின் உளவியல் வெளிப்பாடுதான் இன்றும் சதா  பிறர்மீது குற்ற சாட்டுக்களை அள்ளிவீசும்  பண்பாகும்
எப்போதும் நாம் பிறரை குற்றம் சொல்லி கொண்டே இருந்தால் எமது நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற துவேஷ  மனப்பான்மையை அன்று செல்வநாயகம் காலத்தில்  சுதந்திரன் பத்திரிக்கை மூலம்  சாதித்துக்கொண்ட செல்வநாயகம் கட்சி இன்றும் அதே பாணியில்  உதயன் மூலம்  விஷ விதைகளை மக்கள்  மனங்களில் தூவி கொண்டிருக்கிறது ,
பிச்சைக்காரன் அதிகம் அனுதாபம் தேடி அதிகம் பிச்சை எடுப்பதற்கு அதிகம்  சொறிந்து  அந்த நோயினாலேயே பின்பு படுத்த படுக்கையாகிவிடுவது போல் இருக்கிறது இவர்களின் ஒப்பாரி அரசியல்
இவர்களை இந்த துரோகி பட்டமளிப்பு அரசியல் உச்சம் பெற்றது செல்வநாயகம் தலைமையில் தான் ,
தமிழ் மக்கள் ஒற்றுமையாக கூடி பேசி தான் ஒரு பொது கருத்து எட்ட வேண்டும் அதற்காக ஒரு வட்ட மேசை மாநாடு கூட்ட வேண்டும் என்று  ஐம்பதுகளில் இருந்தே கோரிக்கை விடுத்தார்  அமரர்  ஜி. ஜி. பொன்னம்பலம் , அதை மிகவும் கேவலமாக இழிவு படுத்தி  எஸ் ஜே வி செல்வநாயகம்  பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்று சேராது என்று திருவாய் மலர்ந்து அருளினார். அன்று ஆரம்பித்தது தமிழ் பயங்கரவாத அரசியல் .
அதன் அசுர வளர்ச்சியை  தீனி  போட்டு வளர்த்தது  சுதந்திரன் பத்திரிக்கை .
இன்றைய உதயன் பத்திரிக்கை போன்ற விற்பனையில் உச்சத்தில் இருந்து கொழுத்த லாபம் கண்ட அந்த விஷ பத்திரிகையின் உரிமையாளர்  சாட்சாத்  எஸ் ஜே வி செல்வநாயகமேதான்
அந்த சுதந்திரன் மூலம் செல்வநாயகம் குழாத்தினர்  பெற்றெடுத்த  கள்ள குழந்தை தான் தமிழ் பாசிச அரசியல்  .
பின்பு அதே பாசிச அரசியலுக்கு அவர்களே பலியானது தொடர்கதையானது .
அதை தொடர்ந்த அத்தனை பெரும்  தமிழ் மக்களை இருட்டில் தள்ளிய மாபெரும் தவறை இழைத்து விட்டனர்  என்றே கூறவேண்டும் .
நாம் எப்போது தவறான பாதையிலே சிந்தித்து கொண்டு  இருந்தால் நல்லது எப்படி நடக்கும்?
 இந்த இயற்கை மிகவும் அற்புதமான கருவியாகும்  நாம் என்ன எண்ணுகிறோமோ அதை எமக்கு திருப்பி  தரும் ,

கொஞ்சம் நிதானித்து பார்த்தால் தெரியும் நாம் எப்போது நல்லதையே நினைத்து தான் அரசியல் தெரிவுகளை மேற்கொண்டோமா என்பது subeedcham.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக